Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"வெட்டு 1 + துண்டு 3".. உறுப்புகளை கழுவி பாக்ஸில் திணித்து.. கிச்சனில் அதென்ன ரத்தமா.. திணறும் போலீஸ்

ஷ்ரத்தா கொலை வழக்கில் மேலும் சில தகவல்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காதலியை வெட்டி துண்டுகளாக்கி, ஒவ்வொரு துண்டுகளையும் ரத்தக்கறை இல்லாமல் கழுவி, கழுவி எடுத்து, பாக்ஸில் எடுத்து வைத்துள்ளான் சைக்கோ கொலையாளி அப்தாப்.. ரத்தக்கறை வீட்டில் இல்லாமல் இருப்பதற்காக, பலமுறை வீட்டை கழுவிவிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.. அப்படி இருந்தும், கிச்சனில் ரத்தக்கறை இருப்பதை தடயவியல் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கொலை செய்த பயங்கரத்தைவிட, அந்த கொலைக்கு பின் நடந்த சம்பவங்கள்தான் அதைவிட நடுக்கத்தை பொதுமக்களுக்கு இந்த டெல்லி சம்பவத்தில் ஏற்படுத்தி வருகிறது.

கடந்த மே 18ம் தேதி இவர்களுக்குள் சண்டை பெரிதாகி விட்டது.. ஷ்ரத்தாவை அஃப்தாப் தாக்கியபோது அவர் கத்தி கூச்சல் எழுப்பியதால், அஃப்தாப்புக்கு ஆத்திரம் அதிகமானது..

தலைகாணி

தலைகாணி

ஷ்ரத்தாவின் வாயையும் மூக்கையும், தலைகாணியை எடுத்து நீண்ட நேரம் அழுத்தியதில், ஷ்ரத்தா துடிதுடித்து இறந்தார்.. இதனை யாருக்கும் தெரியாமல் மறைக்க அப்தாப் எடுத்துக் கொண்ட முயற்சி, அனைவரையும் உறைய செய்துவிட்டது.. 300 லிட்டர் ஃப்ரிட்ஜை சடலத்தை மறைக்கவே வாங்கியுள்ளார்... பிறகு, தான் வேலை பார்க்கும் ஹோட்டலுக்கு சென்று கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து, ஷிரத்தாவின் கைகளை 3 துண்டாகவும் கால்களை 3 துண்டாகவும் உடலை மொத்தமாக 35 துண்டுகளாகவும் வெட்டியுள்ளார்.

 துர்நாற்றம்

துர்நாற்றம்

அந்த துண்டுகளை பிளாஸ்டிக் கவரில் போட்டு பிரிட்ஜில் வைத்துள்ளார்... பின்னர் தினமும் இரவு 2 மணிக்கு வெளியே சென்று ஒவ்வொரு துண்டாக நாய்களுக்கு வீசி எறிந்துள்ளார். வீட்டில் துர்நாற்றம் வீசாமல் இருக்க தினமும் ஊதுபத்திகளை கொளுத்தி வைத்துள்ளார்.. தொடர்ந்து அப்தாப்பிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. ஷ்ரத்தாவை கொன்று வெட்டி துண்டுகளாக்கி, ஒவ்வொரு துண்டுகளையும் ரத்தக்கறை இல்லாமல் கழுவி, பாக்ஸில் எடுத்து வைத்துள்ளார் அப்தாப்..

 ரத்தக்கறை

ரத்தக்கறை

ரத்தக்கறை வீட்டில் இல்லாமல் இருப்பதற்காக, பலமுறை வீட்டை கழுவிவிட்டதாலும், ஒவ்வொரு உடல் உடல்களை சுத்தப்படுத்தவும் அதிகப்படியான தண்ணீரை அப்தாப் பயன்படுத்தி இருப்பதாக சொல்கிறார்கள்.. எப்பவுமே இல்லாத அளவுக்கு இந்த மாதம் தண்ணீர் பில் அதிகமாக வந்திருக்கிறது. இதுதான் அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது... அப்போதுதான், கிச்சனில் ரத்தக்கறை இருப்பதையும் தடயவியல் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 பீஸ் பீஸாக

பீஸ் பீஸாக

ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள் என்று நம்பப்படும் 13 பாகங்கள் மட்டுமே தற்போது மீட்கப்பட்டு உள்ளன.. டிஎன்ஏ ரிசல்ட் வந்தால்தான் மற்ற தகவல்களும் தெரியவரும்.. போலீசாரிடம் வாக்குமூலம் தரும்போதுகூட, கொலை செய்ததற்கான ஒரு பதற்றமோ, கலவரமோ முகத்தில் இல்லையாம்.. சாதாரணமாக, இயல்பாகவே அப்தாப் பேசியிருக்கிறார். அதனால்தான், உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டால்தான், அவரது உண்மையான மனநிலையை அறிய முடியும் என்று நம்புகிறார்கள்.

 நெட்ஃபிளிக்ஸ்

நெட்ஃபிளிக்ஸ்

கொலை செய்த உடனேயே, 35 துண்டுகளாக ஷ்ரத்தா உடலை வெட்டுவதற்கு சுமார் 10 மணி நேரம் வரை ஆனதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.. பீர் வாங்கி வந்து குடித்துக்கொண்டே, உடலை பல துண்டுகளாக வெட்டியதாகவும், உடல்பாகங்களை வெட்டும் போது அடிக்கடி நெட்பிளிக்ஸில் சினிமா பார்த்துக்கொண்டே இந்த காரியத்தை செய்ததாகவும் சொல்லி உள்ளான்.. உடலை துண்டுதுண்டாக வெட்டும் போது அடிக்கடி பிரேக் எடுத்துக் கொண்ட, அந்த நேரத்தில் பீர் குடித்து, கஞ்சாவும் புகைத்ததாக தெரிவித்துள்ளார்.. ஒவ்வொரு உறுப்பையும் வெட்டிய பிறகு அதில் ரத்தக்கசிவு இருக்ககூடாது என்பதற்காகவே நன்றாக கழுவ வேண்டியதாக போயிற்றாம்..

 சேலஞ்சிங் கேஸ்

சேலஞ்சிங் கேஸ்

ரசாயனம் ஊற்றி வீட்டை கழுவிவிட்டாலும், தடயவியல் அதிகாரிகள் கொலை நடந்த வீட்டை சோதனை செய்தபோது கிச்சனில் ரத்தக்கறை இருப்பதை கண்டுபிடித்துள்ளார்கள்.. அந்த வீட்டிற்குள்ளேயே ரம்பம் ஒன்றும் கிடைத்துள்ளது.. ஒருவேளை இதில்கூட ஷ்ரத்தாவை வெட்டியிருக்கலாம் என்று சந்தேகப்படுகிறார்கள். அப்தாப் வீட்டை ஆய்வு செய்த தடயவியல் அதிகாரி இதை பற்றி சொல்லும்போது, "அனைத்து ஆதாரங்களையும் அப்தாப் அகற்றிவிட்டான்... பிரிட்ஜ் முதல் வீட்டின் எல்லா பகுதியையும் சுத்தமாக கெமிக்கல் ஊற்றி கழுவி விட்டுள்ளான்.. கிச்சனில் மட்டும் ரத்தக்கறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது... அதுவும் சோதனைக்கு பிறகுதான் தெரியவரும்" என்றார்..

 ஊதுபத்தி

ஊதுபத்தி

அந்தவகையில், அப்தாப் வீட்டில் எந்த ஒரு சின்ன ஆதாரமும் கிடைக்கவில்லை என்று போலீசார் சொல்கிறார்கள்.. எனவே, இந்த வழக்கில் ஆதாரங்களை கண்டுபிடிப்பது என்பது கொஞ்சம் சவாலாகத்தான் இருக்கும் என்றும் கூறுகிறார்கள். இதனிடையே, ஷ்ரத்தாவின் நண்பர்கள் தரப்பில் வேறு ஒரு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.. உண்மையாக காதலிக்கும் ஒருவரால், தன்னுடைய காதலியை 35 துண்டுகளாக எப்படி வெட்ட முடியும்? இவ்வளவு கொடூரமாக கொலை செய்யவே முடியாது என்பதால், இதற்கு பின்னணியில் வேறு ஏதோ காரணம் இருக்கிறது என்றும், அதை போலீசார் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+