ஆபரேஷன் அஜய்: இஸ்ரேலிலிருந்து பாதுகாப்பாக நாடுதிரும்பிய 141 இந்தியர்கள்! மத்திய இணையமைச்சர் வரவேற்பு
டெல்லி: இஸ்ரேல்- ஹமாஸ் போர் கடந்த 16 நாட்களாக நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலில் தங்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்க ஆபரேஷன் அஜய் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை இந்த திட்டத்தின் 6வது சிறப்பு விமானம் டெல்லி வந்து சேர்ந்துள்ளது. இதன் மூலம் 141 இந்தியர்கள், 2 நேபாளிகள் மீட்கப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் கிளர்ச்சி குழுக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுப்பதும், அதற்கு எதிராக இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்துவதும் பாலஸ்தீனத்தில் அடிக்கடி நடந்து வரும் சம்பவங்களாகும். ஆனால் கடந்த 2021ம் ஆண்டு அன்று 11 நாள் நடைபெற்ற போருக்கு பின்னர் பாலஸ்தீனத்தில் சற்றே அமைதி நிலவியது. இதனையடுத்து கடந்த 7ம் தேதி இந்த அமைதியை குலைக்கும் வண்ணம் ஹமாஸ், இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல்தான் பலமான நாடு என்று சொல்லிக்கொண்டிருந்த நிலையில், இந்த ஏவுகணை தாக்குதல் அந்நாட்டின் ஆத்திரத்தை அதிகமாக தூண்டியது. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அதேபோல பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் படையினர் பெண்களையும், குழந்தைகளையும், ராணுவ வீரர்களையும் பிணை கைதிகளாக பிடித்து சென்றனர். இந்த கைதிகளை வைத்துதான் தற்போது இஸ்ரேலுக்கு, ஹமாஸ் போக்கு காட்டி வருகிறது. ஹமாஸின் இந்த பயங்கரவாத தாக்குதலை அமெரிக்கா, பிரிட்டன் தொடங்கி பெரும்பாலான மேற்கு நாடுகள் கண்டித்திருக்கின்றன.
மறுபுறம் இஸ்ரேல், காசா மீது அதிரடி தாக்குதலை தொடுத்திருக்கிறது. கடந்த 16 நாட்களாக வான்வழி தாக்குதலை மேற்கொண்ட இஸ்ரேல் தற்போது தரை வழியாக ஊடுருவ முயன்று வருகிறது. பதிலுக்கு ஹமாஸ் படையும் அடிக்கடி ராக்கெட்களை வீசி தாக்குதலை மேற்கொண்டிருக்கிறது. இந்த சூழலில் இஸ்ரேலில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு, ஆபரேஷன் அஜய் எனும் திட்டத்தை செயல்படுத்த தொடங்கியது. கடைசியாக கடந்த 17ம் தேதியன்று இந்த 5வது சிறப்பு விமானம் இஸ்ரேலிலிருந்து 286 இந்தியர்கள், 18 நேபாளிகளை ஏற்றிக்கொண்டு டெல்லி வந்து சேர்ந்தது.
இந்நிலையில் 6வது சிறப்பு விமானம் இன்று அதிகாலை 141 இந்தியர்கள் மற்றும் 2 நேபாளிகளுடன் டெல்லி வந்து சேர்ந்திருக்கிறது. டெல்லி வந்த இந்தியர்களுக்கு மத்திய இணையமைச்சர் ஃபாகன் சிங் குலஸ்தே தேசிய கொடியை கொடுத்து வரவேற்பளித்தார். இதுவரை ஆபரேஷன் அஜய் மூலம் 18 நேபாளிகள் உட்பட 1,200 இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பியுள்ளனர். தேவையெனில் கூடுதல் விமானங்களையும் அனுப்ப தயாராக இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications