ஓமிக்ரான் இந்தியாவில் பரவினால்.. ஒரு நாளைக்கு எவ்வளவு கேஸ் பதிவாக கூடும் தெரியுமா? பால் வார்னிங்
இந்தியாவில் ஓமிக்ரான் பரவினால் தினமும் சுமார் 14 முதல்15 லட்சம் பேர் வரை பாதிக்கப்படுவார்கள் என்று நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் எச்சரித்துள்ளார்.
டெல்லி: ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் கூறியுள்ளார். இந்தியாவில் ஓமிக்ரான் பரவினால் தினமும் சுமார் 14 முதல்15 லட்சம் பேர் வரை பாதிக்கப்படுவார்கள் எனவும் வி.கே. பால் எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 20 நாட்களாக 10,000த்திற்கும் கீழ் குறைந்திருக்கிறது என்றாலும் நாம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை என்று வரிசையாக வரவிருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று டாக்டர் வி.கே பால் கூறியுள்ளார். இது இன்னமும் கூட வளர்ந்து வரும் எதிர்பாரா சூழல் என்ற மட்டத்தில்தான் இருக்கிறது.
இந்தியாவில் ஓமிக்ரான் மிதமான அளவில்தான் தொற்று பரவி வருகிறது. அரசு நிலைமைகளை கண்காணித்து வருகிறது.
ஒவ்வொரு கொரோனா பரிசோதனை சாம்பிளையும் ஜெனோம் வரிசைப்பாடு செய்வது கடினம். அது கண்காணிப்பு, பெருந்தொற்று பரவல் எச்சரிக்கை உத்தியாகும், அதை வைத்து நோய்க்கணிப்பு செய்ய முடியாது.

ஓமிக்ரான் பரவல்
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கும் நாடுகளில் ஓமிக்ரான் தொற்றும் அதிகரித்து வருவதை நாம் பார்க்கிறோம். ஓமிக்ரான் நிலவரம் பிரிட்டனிலும் ஆப்பிரிக்காவிலும் ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் வேகமாகப் பரவி வருகிறது.

கொண்டாட்டங்களுக்கு தடை
பிரான்சில் 80% தடுப்பூசி போட்டுக் கொண்ட போதிலும் 65,000 பேருக்கு ஓமிக்ரான் தொற்று பரவியுள்ளது. உருவமாற்றம் அடைந்த வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் ஓமிக்ரான் அலை
பிரிட்டனில் தடுப்பூசி முறை எப்படி என்று நாம் அறிவோம், அங்கு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களையும் ஓமிக்ரான் விட்டு வைக்கவில்லை. பிரிட்டனில் 94,000 பேருக்கு புதிதாக ஓமிக்ரான் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. பிரிட்டன் மக்கள் தொகையில் 1 கோடியே 11 லட்சத்து 90 ஆயிரத்து 354 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

தினசரி 15 லட்சம் பேர்
இந்தியாவில் இது போன்று ஓமிக்ரான் பரவினால் தினமும் சுமார் 14 முதல் 15 லட்சம் பேர் தொற்றினால் பாதிக்கப்படுவார்கள் என்றும் நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் கூறியுள்ளார். கடந்த மே மாதத்தில் இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வீசிய போது தினசரியும் 4 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். பல ஆயிரம் பேர் மரணமடைந்தனர். லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதை அடுத்து தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 10ஆயிரத்திற்கு கீழே குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications