ஒரே நாடு ஒரே தேர்தல்..ராம்நாத் கோவிந்த் குழுவிடம் ஆதரித்த கட்சிகள்- எதிர்த்த கட்சிகள் முழு பட்டியல்!
டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் குழு ஆய்வு செய்த போது பாஜக, அதிமுக உட்பட 32 அரசியல் கட்சிகள் ஆதரித்தன; திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 15 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த திட்டத்தை அன்று ஆதரித்த பிஜூ ஜனதா தளம் கட்சி தற்போது தமது முடிவில் ஊசலாட்டத்தை வெளிப்படுத்துகிறது.
பாஜகவின் கொள்கையான ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை செயல்படுத்தும் வகையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது. மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசின் இந்த முயற்சி நிறைவேறுமா? இல்லையா? அப்படி மசோதா நிரைவேறினாலும் இத்திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும்? என நிறைய கேள்விகள் முன் நிற்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் குழுதான் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஆய்வு நடத்தியது- மக்களிடம் கருத்து கேட்டு ஜனாதிபதியிடம் அறிக்கை அளித்தது. தற்போது ராம்நாத் கோவிந்த் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மத்திய பாஜக அரசு தாக்கல் செய்ய இருக்கிறது.

ராம்நாத் கோவிந்த் குழுவானது மொத்தம் 47 அரசியல் கட்சிகளிடம் இருந்து கருத்துகளைப் பெற்றிருந்தது. இதி 32 அரசியல் கட்சிகள், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஆதரித்திருந்தன. 15 அரசியல் கட்சிகள் எதிர்த்திருந்தன.

ஒரே நாடு ஒரே திட்டத்தை ஆதரித்த கட்சிகள்:
பாஜக
அதிமுக
பிஜூ ஜனதா தளம்
ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியூ)
ஏஜேஎஸ்யூ
என்பிபி
ஏஜிபி
என்டிபிபி
அகாலி தள்
பாட்டாளி மக்கள் கட்சி
ஹெச்ஏஎம்
ஐபிஎஃப்டி
அப்னா தள் (எஸ்)
எம்ஜிபி
நிஷாத் கட்சி
டிபிஏபி
எல்ஜேபி(ஆர்)
எம்என்எஃப்
சிவசேனா,
எஸ்கேஎம்
எஸ்ஏடி
யூபிபிஎல்
ஆர்எல்ஜேடி
ஜிஎன்எல்எப்
ஆர்எல்எஸ்பி
ஆர்சிபி(ஏபி)
தமிழ் மாநில காங்கிரஸ் உட்பட 32 கட்சிகள்.

எதிர்ப்பு தெரிவித்த கட்சிகள்:
காங்கிரஸ்
திமுக
ஆம் ஆத்மி
திரிணாமுல் காங்கிரஸ்
சிபிஐ
சிபிஎம்
மதிமுக
விசிக
பகுஜன் சமாஜ்
மஜ்லிஸ் கட்சி
ஏஐயுடிஎஃப்
சமாஜ்வாதி கட்சி
என்பிஎஃப் உட்பட 15 கட்சிகள்.

பிஆர்எஸ், முஸ்லிம் லீக், தேசிய மாநாட்டுக் கட்சி, ஜேஎம்எம், தெலுங்குதேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், என்சிபி, ஜேடிஎஸ், ஆர்ஜேடி ஆகியவையும் தங்களது கருத்துகளை மட்டும் ராம்நாத் கோவிந்த் குழுவிடம் சமர்ப்பித்திருந்தன.
அன்று ஒரே நாடு ஒரே திட்டத்தை ஆதரித்த பிஜூ ஜனதா தளம் தற்போது, பல்வேறு கேள்விகளுடன் ஊசலட்டமான நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.













Click it and Unblock the Notifications