16 வயசுதான்.. 11 லட்சம் ஃபாலோயர்கள்.. சிரித்தபடியே கடைசி வீடியோ... தற்கொலை செய்த டிக்டாக் பிரபலம்!
16 வயதே ஆன டிக்டாக் பிரபலம் தற்கொலை செய்து கொண்டார்
டெல்லி: வெறும் 16 வயசுதான்.. 11 லட்சம் ஃபாலோயர்ஸ் இருந்து என்ன பிரயோஜனம்.. அழகும், திறமையும் நிறைந்திருந்தும் என்ன பிரயோஜனம்? டிக்டாக் பிரபலம் ஷிகா கக்கார் தற்கொலை செய்து கொண்டு, அவருடைய ரசிகர்களை கண்ணீரில் ஆழ்த்திவிட்டு போயுள்ளார்.
11 லட்சம் ஃபாலோயர்கள் டிக் டாக் உள்பட பல்வேறு சமூகவலைதளங்களில் பிரபலமான 16 வயது சிறுமி, வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள ப்ரீத்தி விஹாரில் வசித்து வந்தவர் ஷியா கக்கார்... 16 வயசு அழகு சிறுமி.. நல்ல திறமைசாலி.. நன்றாக டான்ஸ் ஆடுவார்.. டிக்டாக் வீடியோக்களில் ஷியா என்றால் அவ்வளவு ஃபேமஸ்.
விதவிதமாக நடித்து வீடியோக்களை பதிவிட்டுள்ளார்.. இவரது நடன அசைவுக்கும் நடிப்புக்கும் சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார்.. இன்ஸ்டாகிராமில் மட்டும் 1 லட்சம் பேர் இவருக்கு ஃபாலோயர்ஸ் உள்ளனர்... அதேபோல டிக்டாக்கில் 11 லட்சம் ஃபாலோவர்ஸை வைத்துள்ளார். இது எல்லாவற்றிற்கும் காரணம், ஷியாவின் அழகும் திறமையும்தான்.
இந்நிலையில் இவர் தற்கொலை செய்துகொண்டார்.. நேற்றுகூட நல்லாதான் இருந்தாராம்.. ஒரு விளம்பர படத்தின் ஷுட்டிங்கிலும் கலந்து கொண்டுள்ளார்.. அங்கே எல்லாரிடமும் சகஜமாக பேசியிருக்கிறார்.. அதனால் துறை ரீதியாக எந்த பிரச்சனையும் இவரிடம் இருந்ததாக தெரியவில்லை.. ஒருவேளை தனிப்பட்ட பிரச்சனைகளுக்காக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். ஆனால், வீட்டில் 4 நாட்களாக அப்செட்டில் இருந்தாராம்.
தற்கொலைக்கு முன்பு சிரித்தபடியே ஒரு வீடியோவையும் இவர் வெளியிட்டுள்ளது மேலும் குழப்பத்தை தந்து வருகிறது. போலீசாரும் ஷிகாவின் தற்கொலைக்கான காரணத்தை விசாரித்து வருகிறார்கள்.. இது தொடர்பாக பள்ளி ஆசிரியைகள், நண்பர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்... ஷிகாவின் மரணம் அவரது ரசிகர்களை நிலைகுலைய வைத்துள்ளது.
சமீப காலமாக மன அழுத்தம் மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.. பேர், புகழ் எவ்வளவு இருந்தாலும், ஃபாலோயர்ஸ் எத்தனை பேர் இருந்தாலும் மன அழுத்தம் இவர்களை மிஞ்சி விடுகிறது.. சுஷாந்த் சிங் மரணத்தின் சோகமே இன்னும் ஓயவில்லை.. அதற்குள் இன்னொரு பெண் தற்கொலை என்பது ரசிகர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை..இத்தனை ஃபாலோயர்ஸ்கள் இருந்தும் என்ன பிரயோஜனம்? மனசு விட்டு பேச ஒருத்தரும் இல்லாமல் போனது இந்த நபர்களின் துரதிருஷ்டம்தான்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications