கணவருக்கு 40, மனைவிக்கு 19.. ஆண் நண்பருடன் வாழ விரும்பிய பெண்.. நீதிமன்றம் போட்ட உத்தரவு
டெல்லி: 40 வயது நபருக்கும் 19 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் முடிந்த நிலையில், அந்தப் பெண் திடீரென வீட்டை விட்டு மாயமாகி தனது ஆண் நண்பருடன் வாழ்ந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணிண் கணவர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின் போது சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு பரபரப்பு சம்பவம் நடைபெற்றது.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த 40 வயது நபருக்கும் 19 வயது பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. ஓராண்டுக்கு முன்பாக திருமணம் முடிந்த நிலையில், அந்த இளம்பெண்ணுக்கு ஆண் நண்பர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு
திடீரென ஒரு நாள் வீட்டில் இருந்து மாயமான நிலையில், 40 வயதான கணவர் அதிர்ச்சிஅடைந்தார். இதையடுத்து நீதிமன்றத்தில் தனது அந்த நபர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். தனது மனைவியை ஒருவர் சட்டவிரோதமாக கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதாகவும் அவரை மீட்டுதர வேண்டும் என்று கூறியிருந்தார்.
நீதிமன்ற உத்தரவையடுத்து போலீசார் அந்த இளம்பெண்ணை மீட்டு பெண்கள் நலவாழ்வு மையமான ஒன் ஸ்டாப் சென்டரில் வைத்து இருந்தனர். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது அந்த இளம்பெண் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, தனக்கு கணவருடன் வாழ விருப்பம் இல்லை எனவும் அவருக்கும் எனக்கும் இடையே உள்ள வயது வேறுபாடு காரணமாக நான் தவறாக நடத்தப்படுகிறேன்.
21 வயது வித்தியாசம்
குடும்பத்தினருடனும் செல்ல விருப்பம் இல்லை. நான் வயது வந்த பெண் என்பதால் விருப்பப்படி வாழும் உரிமை எனக்கு உள்ளது. எனவே, எனது ஆண் நண்பருடனே தான் செல்ல விரும்புவதாக நீதிமன்றத்தில் உறுதியாக கூறினார். இந்த வழக்கு விசாரணையின் போது இளம்பெண்ணின் கணவர், பெற்றோர் மற்றும் அவரது ஆண் நண்பர் அனுஜ் குமார் ஆகியோரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
நீதிபதிகள், உங்களின் விருப்பம் என்ன என்று கேட்ட மறுநொடியே தயங்காமல் அந்த இளம்பெண் மனதில் உள்ளதை கொட்டி தீர்த்தார். 21 வயது வித்தியாசம் தனக்கும் தனது கணவருக்கும் இருப்பதாகவும் இதனால், கணவன் - மனைவி உறவில் சமாமான நிலை இல்லை என்றும் கூறினார். இதையடுத்து இளம்பெண்ணுக்கு கவுன்சிலிங் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கணவருடன் வாழ விருப்பமில்லை
ஆனால் கவுன்சிலிங் முடிந்த பிறகும் ஆண் நண்பருடன் செல்லும் தனது முடிவில் அந்த இளம்பெண் உறுதியாக இருந்தார். அப்போது அந்த இளம்பெண்ணின் ஆண் நண்பரும் அவரை கண்கலங்காமல் பார்த்துக்கொள்வேன் என்று உறுதியளித்தார். இதையடுத்து, வழக்கில் தீர்ப்பளித்த டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் ஆனந்த் பட்நாயக் மற்றும் புஷேபந்திர யாதவ், "அந்த பெண்ணின் முடிவுதான் முக்கியம் பெறும்.
நீதிபதி அதிரடி உத்தரவு
தன்னை யாரும் கட்டாயப்படுத்தி வைக்கவில்லை என்று அந்த பெண்ணே கூறியதால், இந்த ஆட்கொணர்வு மனுவை வைத்து இருக்க வேண்டியது இல்லை. இளம்பெண் தனது ஆண் நண்பருடன் செல்ல நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது. யாருடன் வாழ வேண்டும் என்ற முடிவை எடுக்கும் உரிமை வயது வந்த நபருக்கு உள்ளது.
இந்த வழக்கை முடிப்பதற்கு முன்னால், ஆறு மாதங்களுக்கு அதிகாரிகள், இந்த இளம்பெண்ணின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்ய அவருடன் தொடர்பில் இருக்க வேண்டும். உரிய நடவடிக்கைகள் முடிந்த பிறகு அந்த பெண்ணை ஒன் ஸ்டாப் சென்டரில் இருந்து விடுவிக்கலாம்" என்று உத்தரவிட்டனர்.
-
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு












Click it and Unblock the Notifications