ஸ்டிரைக்கில் குதித்த வங்கி ஊழியர்கள்.. இந்த வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வங்கி சேவை..!

வங்கி ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வங்கி ஊழியர்கள் இன்றும், நாளையும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதால், இந்த வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வங்கி சேவை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் மின்சார திருத்த சட்டம், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல், பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் நாளையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

பாஜக அரசை அரசை கண்டித்து நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் 2 நாட்கள் பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன..

துவங்கியது

துவங்கியது

இதன்படி இன்றும் நாளையும் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் பொது வேலைநிறுத்தம் ஆரம்பமாகி உள்ளது.. 'மக்களைக் காப்போம், நாட்டைக் காப்போம்' என்ற முழக்கத்துடன் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்திருந்த நிலையில், இன்று காலை போராட்டத்தை துவங்கியுள்ளனர்.. இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன..

வேலைநிறுத்தம்

வேலைநிறுத்தம்

இதில், வங்கி சேவை பாதிக்கப்படும். வங்கி ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால், இன்றும் நாளையும் வங்கிகள் செயல்படாது. பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கக் கூடாது என்பது உட்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் இன்றும், நாளையும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.. இதனால், வரும் 30, 31ம் தேதிகளில் மட்டுமே வங்கிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

ஆண்டுக்கணக்கு

ஆண்டுக்கணக்கு

ஆண்டுக்கணக்குமுடிப்பதற்காக ஏப்ரல் ஒன்றாம் தேதியான வெள்ளிக்கிழமை வங்கிகள் செயல்பட்டாலும்கூட, வாடிக்கையாளர் சேவை நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, அடுத்த மாதம் 2ம் தேதி சனிக்கிழமை தெலுங்கு வருடப் பிறப்பு என்பதால், அன்றும் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. அதற்கு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை நாளாகும்..

ஆன்லைன் சேவைகள்

ஆன்லைன் சேவைகள்

அதனால், இந்த வாரத்தில், இரண்டு நாட்கள் மட்டுமே வங்கிகள் முழுமையாக செயல்படும்.. எனினும், ஆன்லைன் சேவைகள் வழக்கம் போல தடையின்றி செயல்படும் என்றும் ஏடிஎம் மையங்களில் பணத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, போதிய அளவு பணம் இருப்பு வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+