9 மாதங்களுக்கு பிறகு.. முழு எண்ணிக்கையுடன் செயல்பட உள்ள உச்சநீதிமன்றம்.. நாளை 2 நீதிபதிகள் பதவியேற்பு
சமீபத்தில் புதியதாக 5 நீதிபதிகள் பதவியேற்றுக்கொண்ட நிலையில் தற்போது மேலும் இரண்டு நீதிபதிகள் பதவியேற்று கொள்கின்றனர்.
டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதியாக நாளை இரண்டு நீதிபதிகள் பதவியேற்க உள்ளனர். இதன் மூலம் ஒன்பது மாதங்களுக்கு பிறகு உச்சநீதிமன்றம் முழு பலத்துடன் செயல்பட இருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 32. ஆனால் கடந்த ஒன்பது மாதங்களாக இந்த முழு எண்ணிக்கை நிரப்பப்படாமல் இருந்து வந்தது. இதற்காக சில நீதிபதிகளின் பெயர்களை உச்சநீதிமன்றம் கொலீஜியம் பரிந்துரை செய்தது. ஆனால் அதற்கு முன்பிருந்தே மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ கொலீஜியம் குறித்து கடும் விமர்சனங்களை முன்வைக்க தொடங்கிவிட்டார். இந்த அமைப்பு கலைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்த தொடங்கினார்.
இதற்கு காரணம் உண்டு. அதாவது உச்சநீதிமன்ற நீதிபதிகளை கொலீஜியம்தான் நியமிக்கும். இந்த நியமனத்திற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளிப்பார். இவர்கள் இருவருக்கும் இடையில் நியமனத்தை கொலீஜியத்திடமிருந்து பெற்று குடியரசு தலைவருக்கும், அவரிடமிருந்து ஒப்புதல் பெற்று கொலீஜியத்திற்கும் மத்திய அரசுதான் கொடுக்கும். ஆனால் கடந்த 2014ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து கொலீஜியம் முறையை மாற்ற வேண்டும் என்று மத்திய அரசு முயன்றது.

கொலீஜியம்
இதற்காக 'தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை' கொண்டு வந்தது. இதன்படி இனி கொலீஜியம் நீதிபதிகளை தேர்ந்தெடுக்காது. அதற்கு மாறாக இந்த ஆணையம்தான் இப்பணியை மேற்கொள்ளும். ஆணையத்தில் மத்திய சட்ட அமைச்சர், நீதிபதிகள் மற்றும் 2 முக்கியஸ்தர்கள் இடம் பெற்றிருப்பர். ஆனால் இந்த ஆணையத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதிலிருந்துதான் கொலீஜியம் அமைப்பு குறித்து மத்திய அரசு தொடர்ந்து கருத்துக்களை கூறி வருகிறது. இந்த மோதல்களின் உச்சமாக நீதிபதிகளின் பரிந்துரையை மத்திய அரசு தொடர்ந்து தாமதப்படுத்தி வந்தது.

கண்டனம்
இந்த தாமதத்திற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. இதனையடுத்து நீதிபதிகளின் நியமனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த ஒப்புதலின் அடிப்படையில் கடந்த 6ம் தேதி ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மிதல், பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சய் கரோல், மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.வி.சஞ்சய் குமார், பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதி அசானுதீன் அமனுல்லா, அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக பதவியேற்றுக்கொண்டனர். இருப்பினும் மேலும் 2 காலியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது.

புதிய நீதிபதிகள்
இதற்கும் இரண்டு நீதிபதிகளை கொலீஜியம் பரிந்துரைத்த நிலையில், குடியரசுத்தலைவர் இந்நியமனத்திற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்து வந்த நீதிபதி ராஜேஷ் பிண்டல் மற்றும் குஜராத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்து வந்த நீதிபதி அரவிந்த் குமார் ஆகியோர் புதிய நீதிபதிகளாக பொறுப்பேற்றுக்கொள்கின்றனர். இவர்களுக்கு தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திரசூட் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இதில் நீதிபதி ராஜேஷ் பிண்டல் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்று வந்திருக்கிறார்.

கர்நாடகாவிலிருந்து
அதேபோல நீதிபதி அரவிந்த் குமார், கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் குஜராத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி வகித்து வந்திருக்கிறார். இவர் கடந்த 1987ம் ஆண்டு முதல் வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார். அதன் பின்னர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசின் கூடுதல் நிலை வழக்கறிஞராகவும், நேரடி வரிகள் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும், உதவி சொலிசிட்டர் ஜெனரலாகவும் பதவி வகித்து பின்னர் கடந்த 2009ம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications