இந்தியாவில் மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி.. சிகிச்சையளிக்கும் மருந்துக்கும் பச்சைக்கொடி!
டெல்லி: இந்தியாவில் இன்று ஒரே நாளில் மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளின் அவரசக்கால பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா வேக்சின் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதலில் முன்களப் பணியாளர்களுக்கு மட்டும் வேக்சின் போடப்பட்ட நிலையில், பின்னர் அது படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது.
இந்தியாவில் இதுவரை 125 கோடிக்கும் அதிகமான வேக்சின் போடப்பட்டுள்ளது. நாட்டு மக்கள்தொகையில் சுமார் 61% பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது.

2 தடுப்பூசிகளுக்கு அனுமதி
இந்நிலையில், வேக்சின் பணிகளை மேலும் வேகப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அதன்படி இன்று ஒரே நாளில் மேலும் 2 வேக்சின்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோர்பிவேக்ஸ் மற்றும் கோவோவேக்ஸ் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் வேக்சின் பணிகளை மேலும் வேகப்படுத்த முடியும்.

மருந்துக்கும் அனுமதி
அதேபோல கொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கும் மால்னுபிரவிர் மருந்துக்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த மருந்தை 18 வயதைத் தாண்டிய கொரோனா நோயாளிகளுக்கு அவசரக்கால சூழ்நிலைகளில் பயன்படுத்தலாம். கொரோனா மோசமான பாதிப்பை ஏற்படுத்துவதை இதைக் கொண்டு கட்டுப்படுத்த முடியும். இந்த மால்னுபிரிவிர் வேக்சினை இந்தியாவில் 13 நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

சுகாதார துறை அமைச்சர்
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில், "கொரோனாவுக்கு எதிரான போரில் நம்மை வலுப்படுத்தும் வகையில் ஒரே நாளில் 3 மருந்துகளுக்கு - கோர்பிவேக்ஸ் வேக்சின், கோவோவேக்ஸ் வேக்சின், மால்னுபிரவிர் மருந்திற்கு அவசரக்கால அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் கோவோவாக்ஸ் வேக்சின் நானோ துகள்கள் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட தடுப்பூசியாகும்.

கோர்பிவேக்ஸ் வேக்சின்
கோர்பிவேக்ஸ் வேக்சின் என்பது ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்ட பயோலாஜிக்கல்-இ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியாகும். இது இந்தியாவில் RBD protein sub-unit vaccine தொழில்நுட்பத்தை மையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள முதல் கொரோனா தடுப்பூசியாகும். பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா கொரோனாவுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்த வேக்சின்கள் நமது பலத்தை வலுப்படுத்தும். நமது நிறுவனங்கள் உலகத்திற்கே பெரும் சொத்து" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

மொத்தம் 8 வேக்சின்கள்
கோர்பிவேக்ஸ் வேக்சின் - இந்தியாவிலேயே முற்றிலுமாக உருவாக்கப்பட்ட 3ஆவது வேக்சின் ஆகும். ஏற்கனவே பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின், Zydus Cadila ஆகிய வேக்சின்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவை தவிர கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி, மாடர்னா, சிங்கிள் டோஸ் வேக்சினான ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாக 2 வேக்சின்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதன் மூலம் இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்ட வேக்சின்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.

ஏன் முக்கியம்
இந்தியாவில் 8 வேக்சின்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள போதிலும் கோவிஷீல்டு தடுப்பூசியே பெரும்பாலும் வேக்சின் பணிகளில் பயன்படுத்தப்படுகிறது. மற்ற தடுப்பூசிகளில் உற்பத்தி சிக்கல் காரணமாகப் பயன்படுத்த முடியாத சூழல் இருந்தது. இந்தச் சூழ்நிலையில் பயோலாஜிக்கல்-இ நிறுவனத்தின் கோர்பிவேக்ஸ் அனுமதி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் தான் பயோலாஜிக்கல்-இ நிறுவனத்திடம் 30 கோடி வேக்சின்களுக்கு ஆர்டர் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications