ஒற்றுமை பற்றி பேசிய மோடி.. முஸ்லிம்களை பாராட்டிய எஸ்வி.சேகர், நாராயணன் -அன்றும் கொதித்த அரபு நாடுகள்
டெல்லி: பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவின் அவதூறு கருத்தால் அரபு நாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள், வேலையை இழந்துள்ள நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா காலத்தில் இந்திய இஸ்லாமியர்களுக்கு எதிரான பாஜக ஆதரவாளர்களின் அவதூறு பிரச்சாரத்தில் அரபு நாடுகள் பலர் வேலையிழந்தனர்.
சர்ச்சைக்குரிய பேச்சுக்களால் புகழ்பெற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அதில் பேசிய நுபுர் ஷர்மா இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை பாஜக நிர்வாகி நவீன் ஜிண்டால் ட்விட்டரில் பகிர்ந்தார்.

கொந்தளித்த அரபு நாடுகள்
இந்த நிலையில் நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குரிய பேச்சு அரபு நாடுகளிலும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குவைத், கத்தார், ஓமன் ஆகிய நாட்டு அரசுகள் இந்தியாவில் நடக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும், பாஜக பிரமுகரின் பேச்சுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். அரபு நாட்டு மக்கள் ட்விட்டரில் #Boycott India என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வந்தனர்.
Recommended Video

கட்சியிலிருந்து நீக்கம்
இந்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் அருண் சிங் வெளியிட்ட அறிக்கையில், மத அடிப்படையில் இழிவுபடுத்துவது பாஜகவின் கொள்கைகளுக்கு எதிரானது என்றும், தங்கள் கட்சி அனைத்து மதங்களையும் மதிக்கிறது எனவும் கூறினார். இதனை தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த நுபுர் ஷர்மா மற்றும் அக்கட்சியை சேர்ந்த நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டு உள்ளனர்.

2 ஆண்டுகளுக்கு முன்..
கடந்த 2020 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் கொரோனா பரவிய நிலையில், இந்தியாவில் அதற்கு இஸ்லாமியர்கள்தான் காரணம் என்று பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். கொரோனா ஜிஹாத் என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டு இஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தனர். இதனால் இந்தியாவில் இஸ்லாமியர்கள் அப்போது பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டனர்.

அரபு நாடுகள் கண்டனம்
இதற்கு அரபு நாடுகள் கடும் கண்டனங்களை பதிவு செய்தன. குறிப்பாக குவைத், பஹ்ரைன், கத்தார், ஓமன், துபாய் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அமைச்சர்கள், அரச குடும்பத்தினர், முக்கிய பிரபலங்கள், நிறுவனங்கள் உயரதிகாரிகள் இந்தியாவில் கொரோனா விசயத்தில் இஸ்லாமியர்கள் குறிவைக்கப்படுவதாக குற்றம்சாட்டினர். அரபு நாடுகளில் பணிபுரிந்துகொண்டு இஸ்லாமியர்களுக்கு எதிராக மதவெறி கருத்துக்களை பகிர்ந்த பலர் பணி நீக்கம் செய்யப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர். அவர்களுடன் பல அப்பாவி இந்துக்களின் வேலையும் பறிக்கப்பட்டன.

இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு கண்டனம்
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா ஜிஹாத் பிரச்சாரத்தை எதிர்த்து 57 இஸ்லாமிய நாடுகளை உள்ளடக்கிய இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்தது. இந்தியாவில் நடப்பது அனைத்தும் இஸ்லாமோபோபியா என விமர்சித்த இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு, இந்திய முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியது.

பிரதமர் மோடி கருத்து
உடனே இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் நரேந்திர மோடி, "கொரோனாவுக்கு இனமோ, மதமோ, நிறமோ, மொழியோ கிடையாது. சகோதரத்துவத்தை நிலைநாட்டுவோம்." என்று அறிவுறுத்தினார். அப்போதைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராஜ் ஸ்ரீவஸ்தவா வெளியிட்ட அறிக்கையில், வளைகுடா நாடுகள் இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதை ஆதரிக்கவில்லை எனக் கூறினார்.

இஸ்லாமியர்களை பாராட்டிய பாஜகவினர்
இருப்பினும் அப்போது அரபு நாடுகளில், இன்றுபோலவே இந்திய பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற எதிர்ப்பு வலுத்து வந்தது. அந்த நேரத்தில், வழக்கத்துக்கு மாறாக பாஜக மூத்த தலைவர்கள் இஸ்லாமியர்களை பாராட்டினர். நடிகரும் பாஜகவை சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் "கொடிய கொரோனா தொற்றில் இருந்து மீள்வதற்கு பல்வேறு சிகிச்சைகளை அரசுகள் மேற்கொண்டு வரும் நிலையில், (ஊநீர்) plasma ரத்த தானம் செய்ய முன் வந்திருக்கும் இஸ்லாமிய மக்களை பாராட்டி, நன்றிகள் சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம். இதுவே மத ஒற்றுமை." என அவர் கூறினார்.

நாராணனன் திருப்பதி கருத்து
கொரோனாவை இஸ்லாமியர்கள் பரப்பியதாக தொடக்கத்தில் கருத்து தெரிவித்து வந்த பாஜகவை சேர்ந்த நாராயணன் திருப்பதியும், பிளாஸ்மா தானம் செய்த இஸ்லாமியர்களை பாராட்டினார். "கொரோனா வைரசை எதிர்த்துப் போராடி அழிக்க அது உதவியாக இருக்கும். தங்களின் ஊநீரை தானம் செய்ய திருப்பூர், தேனியைச் சேர்ந்த, நோயிலிருந்து மீண்ட இஸ்லாமியர்கள் முன் வந்துள்ளனர். தானம் தர தயாராயிருக்கும் அனைவருக்கும் என் நன்றிகளும், பாராட்டுக்களும்." எனக் குறிப்பிட்டார்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications