டச் பண்ணாதீங்க.. உங்க செல்போனுக்கு "இந்த" மேசேஜ் வருதா? தயவுசெய்து ஓபன் பண்ணிடாதீங்க.. பிக்வார்னிங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசின், பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று பரவி வருவதாகவும், அதை யாருமே நம்ப வேண்டாம் என்றும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். என்ன நடந்தது?

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்பது பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட திட்டமாகும்... இந்த திட்டத்தின் மூலம், பல்வேறு பிரிவுகளின்படி மக்களுக்கு தொகை கிடைக்கிறது.

 ₹ 20,55,000 central government to provide loan have you also received this message people alert

வசதிகள்: இந்த திட்டத்தின் கீழ், மக்களுக்கு மொத்தம் 3 வகையாக கடன்கள் வழங்கப்படுகின்றன.. இந்த மூன்று வகைகளிலும் வெவ்வேறு கடன் வசதிகள் உள்ளன...

இந்த திட்டங்கள் மூலம் மக்கள் பல நன்மைகளையும் பெற்றுவருகிறார்கள்.. அதே நேரத்தில், பிரதமர் மோடி மூலம் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் மக்கள் தங்கள் தொழிலைத் தொடங்கலாம் மற்றும் அதற்கான நிதியையும் பெறலாம் என்பதே மகிழ்ச்சிக்குரிய தகவலாகும்.. இந்த திட்டத்தின் பெயரே பிரதான் மந்திரி முத்ரா யோஜனா ஆகும்..

கடன்வசதி: எனவே, இந்த திட்டத்தின் கீழ், மக்கள் 10 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம்... அதுமட்டுமல்ல, பல்வேறு பிரிவுகளின்படி மக்களுக்கு தொகை கிடைக்கிறது. இந்த திட்டத்தின் கீழ், மக்களுக்கு மூன்று வகையாக கடன் வழங்கப்படுகிறது. மூன்று வகைகளிலும் வெவ்வேறு கடன் வசதிகளும் இருப்பதால், பரவலான மக்கள் இதை விரும்புகிறார்கள்.. இந்த அளவுக்கு நன்மை பயக்கும், பிரதம மந்திரி முத்ரா யோஜனா 2023 திட்டத்தின்மூலம் நேரடியாகவே பயன்களையும் பெற்று வருகிறார்கள்.

வசதிகள்: இதிலுள்ள 'சிஷு' என்ற திட்டத்தின் கீழ், மக்களுக்கு 50,000 ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.. மேலும், 'கிஷோர்' திட்டத்தின் கீழ் மக்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது... 5 லட்சத்திற்கும் அதிகமான கடன் தொகைக்கு 'தருண்' என்ற திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கலாம்... இதன் கீழ் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.

இப்படியான கடன்களை பெறுவதன் மூலம், மக்கள் தொழில்முனைவோராக வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முடியும்.. இதன் மூலம் சிறு வணிகர்கள் தங்களது நிதி தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும்... இதனுடன், கடன் தொகையுடன் மக்கள் தங்கள் தொழிலை மேலும் விரிவு செய்து வளர்க்கலாம்.

யோஜனா திட்டம்: இந்த திட்டம் குறித்து, ஒரு பொய்யான தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.. அதாவது, "பிரதம மந்திரி முத்ரா யோஜனா" திட்டத்தின் கீழ் ரூ.20,55,000 கடன் வழங்குவதாக தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

பிரதம மந்திரி முத்ரா யோஜனா 2023 திட்டத்தின்கீழ் ரூ.20,55,000 கடன் வழங்க தயாராக இருப்பதாகவும், குடிமக்கள் தங்களின் செல்போன் எண்களை சரிபார்த்து, சில நிமிடங்களில் கடன் தகுதியைச் சரிபார்க்க வேண்டுமென்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.. ஆனால், இது போலியான செய்தி என்றும், மக்கள் இந்த விஷயத்தில் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் பத்திரிகை தகவல் பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.

எச்சரிக்கை: இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் PIB கேட்டுக் கொண்டுள்ளது... உங்கள் வங்கி/தனிப்பட்ட விவரங்களைப் பகிருமாறு கேட்கும் மின்னஞ்சல்கள்/எஸ்எம்எஸ்களுக்குப் பதிலளிக்க வேண்டாம் என்றும் PIB எச்சரிக்கை விடுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+