ஜிபிஎஸ்சை வைத்து மடக்கிய போலீஸ்! டெல்லியில் 2,000 கோடி கொக்கைன் பறிமுதல்.. ஒரே வாரத்தில் 2வது முறை
டெல்லி: தலைநகர் டெல்லியில் இன்று ரூ.2000 கோடி மதிப்பிலான 200 கிலோ கோகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யபட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த ஒரு வார்த்தில் மட்டும் டெல்லியில் ரூ.7500 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் கடந்த வாரம் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்புள்ள 562 கிலோ கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரே நேரத்தில் இவ்வளவு மதிப்புள்ள கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தேசிய தலைநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நடைபெற்ற அடுத்த சில நாட்களில் மீண்டும் மிகப்பெரிய கடத்தல் சம்பவம் முறியடிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-

டெல்லியின் ரமேஷ் நகர் பகுதியில் மிகப்பெரிய அளவில் கொக்கைன் போதைப்பொருள் கடத்தல் குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து உஷாரான டெல்லி போலீசின் சிறப்பு பிரிவு, ரமேஷ் நகர் பகுதியில் 2 ஆயிரம் கோடி மதிபுள்ள கொக்கைன் போதைபொருளை கைப்பற்றினர். ஜிபிஎஸ்சை வைத்து கடத்தல் கும்பலை சேர்ந்த முக்கிய நபரையும் போலீசார் பிடிக்க முயற்சித்துள்ளனர்.
ஆனால் அதற்குள் கடத்தல் கும்பலை சேர்ந்த நபர் லண்டனுக்கு தப்பி சென்றார். கடந்த வாரம் பிடிக்கப்பட்ட ரூ.5,600 கோடி மதிப்புள்ள கொக்கைன் கும்பல்தான் இந்த கடத்தலையும் செய்து இருப்பதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. ஒரே வாரத்தில் ரூ. 7,500 கோடி மதிப்புள்ள கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் தெற்கு டெல்லியில் நடத்தப்பட்ட சோதனையின் போது, 500 கிலோ கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். லண்டனுக்கு தப்பி செல்ல முயன்ற ஜேஸ்சி என்ற ஜிதேந்திர பால் சிங் என்பவரை போலீசார் கைது செய்தனர். தற்போது கொக்கைன் கடத்தப்பட்ட நிகழ்வுக்கும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும் தொடபு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். டெல்லி மற்றும் மும்பையில் இந்த போதைப்பொருள் கும்பலுக்கு துபாயில் உள்ள கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
டெல்லி திலக் நகர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 400 கிராம் எடை கொண்ட ஹெராயின் மற்றும் 160 கிராம் எடை கொண்ட கொகைன் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். இந் சம்பவத்திற்கு பிறகுதான் அடுத்தடுத்து பெரிய அளவில் கொக்கைன் டெல்லியில் பிடிபட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications