2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து திரும்ப பெறப்படும் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு
டெல்லி: இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதாவது அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ஆயிரம் ரூபாய் தாள்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

கருப்பு பணம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி செல்வதை தடுக்கும் விதமாக பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அப்போது புதிதாக ரூ.500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அதன் முதல் மக்கள் மத்தியில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து வருகிறது.
எனினும் கடந்த சில ஆண்டுகளாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் புழக்கம் கணிசமாக குறைந்தது. புதிதாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அச்சிடுவதை நிறுத்திவிட்டதாகவும் ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது பெருமளவு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இல்லை என்றே பரவலாக பொதுமக்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்றும் மே 23 ஆம் தேதி முதல் வங்கிகளில் கொடுத்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என்றும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது .ஒரு நாளுக்கு 20,000 ரூபாய் வரையில் ஒருவர் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள முடியும்.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications