டெல்லியில் நடந்த மேஜிக்.. 2013 முதல் 2025 வரை.. கிட்டத்தட்ட அப்படியே பலித்த எக்ஸிட் போல் முடிவுகள்?
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தல்களில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் அப்படியே நடந்துள்ளது. இந்த முறையும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜக வெற்றி பெறும் என்றே கணித்திருந்த நிலையில் அதுபோலவே பாஜக வெற்றி முகத்தில் உள்ளது. கடந்த 2013, 2015 மற்றும் 2020 சட்டமன்ற தேர்தல்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அப்படியே தேர்தல் முடிவிலும் எதிரொலித்ததா? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
டெல்லியில் கடந்த 5 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. மொத்தம் 60.44 சதவிகித வாக்குகள் பதிவானது. இன்று சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கிய நிலையில், ஆரம்பம் முதலேயே பாஜக முன்னிலையில் இருந்து வந்தது.

ஆம் ஆத்மியின் முக்கிய வேட்பாளர்கள் கூட ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்தனர். நேரம் செல்ல செல்ல இருபக்கமும் மாறி மாறி முன்னிலை வகித்த நிலையில், மதியம் 12.00 மணிக்கு பின்னர் பாஜகவின் வெற்றி முகம் தெரிய ஆரம்பித்துவிட்டது. 47 தொகுதிகளில் பாஜக வெற்றி முகம் உள்ளது. பெரும்பான்மைக்கு 36 தொகுதிகள் என்றபோது, பாஜகவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதனால் பாஜகவினர் உற்சாகத்தில் உள்ளனர்.
இதற்கிடையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் பலித்தது போலவே இந்த தேர்தல் முடிவுகள் அமைந்துவிட்டது. இந்த தேர்தலில் மட்டுமில்லை கடந்த 3 சட்டமன்ற தேர்தலிலும் கிட்டத்தட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் பலித்து இருக்கின்றது. இது பற்றிய விவரங்களை இங்கு பார்க்கலாம்.
2013 சட்டசபை தேர்தல்
2013 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் தனித்தனியே களம் கண்டன. அப்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எல்லாம் பாஜக 30 முதல் 36 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணித்து இருந்தது. இதேபோன்று ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் சராசரியாக தலா 17 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணித்து இருந்தது.
2013 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிவுகள் ஏறத்தாழ கருத்துக்கணிப்பில் கூறியது போலவே அமைந்தது. பாஜக 30-36 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்ட நிலையில், பாஜக சரியாக 31 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. ஆனால் ஆம் ஆத்மி கட்சி கணிக்கப்பட்டதை விட அதிகமாக 28 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 8 இடங்களில் வெற்றி பெற்றது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தது.
2015 சட்டசபை தேர்தல்
கடந்த 2015 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டன. இந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் ஆம் ஆத்மியே வெற்றி பெறும் என்றும், ஆம் ஆத்மி 45 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணித்து இருந்தது. ஆக்சிஸ் மை இந்தியா மட்டும் ஆம் ஆத்மி கட்சி 53 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணித்து இருந்தது.
ஆனால் அந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி இமாலய வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 67 தொகுதிகளை அப்படியே வாரி சுருட்டியது. பாஜகவால் வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. காங்கிரஸ் இந்த தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
2020 சட்டசபை தேர்தல்
கடந்த 2 சட்டமன்ற தேர்தல்களை போலவே 2020 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய 3 கட்சிகளும் தனித்தனியாக களம் கண்டது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எல்லாம் ஆம் ஆத்மியே வெற்றி பெறும் என்று கணித்து இருந்தது. அதேபோன்று கருத்துக்கணிப்புகளின்படியே ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
ஆனால் எல்லா கருத்துக்கணிப்புகளும் ஆம் ஆத்மி 45 - 50 தொகுதிகளை பெறும் என்று கணித்திருந்தது. பாஜக 17 இடங்களில் வெற்றி பெறும் என்று கணித்து இருந்தனர். ஆனால், 2வது முறையாக மொத்தம் உள்ள 70 இல் 62 தொகுதிகளை கொத்தாக தூக்கியது ஆம் ஆத்மி. பாஜக வெறும் 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது. காங்கிரஸ் இரண்டாவது முறையாக இந்த தேர்தலிலும் ஒரு தொகுதியை கூட கைப்பற்றவில்லை. 2 வது முறையாக ஜீரோ வாங்கியிருந்தது. இந்த கருத்துக்கணிப்பிலும், ஆக்சிஸ் மை இந்தியா மட்டும் ஆம் ஆத்மி 59 - 68 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணித்து இருந்தது. இதன் முடிவே சரியாக அமைந்தது.
2025 சட்டசபை தேர்தல்
கடந்த 3 தேர்தல்களை போலவே இந்த 2025 தேர்தலிலும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டன. இந்தியா கூட்டணி என்ற போதிலும், காங்கிரசும் ஆம் ஆத்மியும் தனியாகவே போட்டியிட்டன. இதில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எல்லாம் பாஜக வெற்றி பெறும் என்று கூறியிருந்தது. கருத்துக்கணிப்புகள் முடிவு போலவே இந்த முறை பாஜக வெற்றி முனைப்பில் உள்ளது.
47 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. ஆம் ஆத்மி 23 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் இந்த முறையும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இதனால் தொடர்ந்து மூன்றாவது முறையாக காங்கிரஸ் ஒரு இடங்களில் கூட வெற்றிக்கணக்கை தொடங்காமல் உள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications