டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லோரும் சேர்ந்துவிட்டோம்.. இனிதான் ஆட்டமே.. மமதாவை வாழ்த்தி உணர்ச்சிகர கடிதம் அனுப்பிய ராகுல்!

மமதா பானர்ஜியின் அழைப்பின் பேரில் நாளை நடக்கும் எதிர்க்கட்சிகளின் மாநாட்டிற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் அழைப்பின் பேரில் நாளை நடக்கும் எதிர்க்கட்சிகளின் மாநாட்டிற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மத்திய பாஜக அரசுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பெரிய மாநாடு ஒன்றை நாளை நடத்த இருக்கிறார். இதற்கு ஐக்கிய இந்தியா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

பாஜக கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பல இதில் ஒன்று சேர்க்கிறது. 90 சதவிகித கட்சிகள் நாளை இந்த ஆலோசனையில் கலந்து கொள்ளபோகிறது. லோக் சபா தேர்தல் கூட்டணி குறித்து இதில் விவாதிக்க உள்ளனர்.

யார் எல்லாம்

யார் எல்லாம்

இந்த ஆலோசனையில், திமுக தலைவர் ஸ்டாலின், மஜத தேசிய தலைவர் தேவ கவுடா, கர்நாடக முதல்வர் குமாரசாமி, முன்னாள் எம்பி யஷ்வந்த் சின்கா, ஆர்எல்டி தலைவர் அஜித் சிங், தேசிய கான்பிரன்ஸ் தலைவர் பருக் அப்துல்லா, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பாஜகவை சேர்ந்த அதிர்ச்சி தலைவர் சத்ருகன் சின்கா, சமாஜ்வாதியின் அகிலேஷ் யாதவ், ஆர்ஜெடியின் தேஜேஷ்வி யாதவ், படிதார் ஜாதி இனத்தின் இளம் தலைவர் ஹர்திக் பட்டேல் ஆகியோர் இதில் கலந்து கொள்கிறார்கள்.

காங்கிரஸ்

காங்கிரஸ்

இந்த விழாவில் காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்ளவில்லை. அதேபோல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் கலந்துகொள்ளவில்லை. காங்கிரஸ் சார்பாக காங்கிரஸ் மூத்த உறுப்பினரும், காங்கிரஸ் நாடாளுமன்ற தலைவருமான மல்லிகார்ஜுனா கார்கேவும், காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்கவியும் கலந்து கொள்கிறார்கள்.

ராகுல் வாழ்த்து

ராகுல் வாழ்த்து

இந்த நிலையில் மமதா பானர்ஜி நடத்தும் இந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். மமதாவிற்கு ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதத்தில், எல்லா எதிர்க்கட்சிகளும் இணைந்துவிட்டது. நான் உங்களுக்கு என்னுடைய முழு ஆதரவை அளிக்கிறேன். நாம் பாஜக அரசுக்கு பெரிய செய்தி ஒன்றை இந்த கூட்டம் மூலம் அனுப்புவோம். முக்கிய கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து இறுகியது.

சிறப்பு

சிறப்பு

மோடியால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளது. பொய்யான வாக்குறுதியாலும், மோசமான ஆட்சியாலும் மக்கள் நிலைகுலைந்து போய் இருக்கிறார்கள். நாம்தான் தற்போது மக்களுக்காக பணியாற்ற வேண்டும். நாளைய இந்தியாவிற்கு நாம்தான் உதவ வேண்டும். மாநில கட்சிகளும், தேசிய கட்சிகளும் சேர்ந்து இந்த தேர்தலின் முடிவை மாற்றுவோம், அது உங்கள் கூட்டத்தில் இருந்து தொடங்க வாழ்த்துகிறேன், என்று ராகுல் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
2019 Lok Sabha election: Rahul Gandhi wishes Mamata Banerjee for grand of Oppn meeting named United India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X