அடேங்கப்பா.. ஒரே ஆண்டு தான்.. ஆனால் பெட்ரோல் 78 முறையும், டீசல் 76 முறையும் கிடுகிடுவென விலையேற்றம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் 2021-2022 நிதியாண்டில் பெட்ரோல் விலை 78 முறையும், டீசல் விலை 76 முறையும் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கூறியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பியாக இருப்பவர் எம்பி ராகவ் சாதா. இவர் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பி இருந்தார்.

இவரது கேள்விக்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு துறை இணையமைச்சர் ராமேஸ்வர் டெலி எழுத்துப்பூர்வமாக ராஜ்யசபாவில் பதில் அளித்துள்ளார்.

எத்தனை முறை விலை உயர்வு?

எத்தனை முறை விலை உயர்வு?

அதன்படி டெல்லியில் 2021-22ம் ஆண்டில் 20.07.2022ம் தேதி வரை பெட்ரோல் விலையானது 78 முறையும், டீசல் விலையானது 76 முறையும் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை 7 நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை 10 நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை 280 நாட்களும், டீசல் விலை 279 நாட்களும் மாற்றம் செய்யப்படவில்லை'' என கூறப்பட்டுள்ளது.

ரூ.16 லட்சம் கோடி வருவாய்

ரூ.16 லட்சம் கோடி வருவாய்

மேலும் மத்திய அரசுக்கு 2016 ம் ஆண்டு வரை பெட்ரோல், டீசல் மூலம் கிடைத்த வருவாய் எவ்வளவு? என்ற கேள்விக்கும் பதிலளிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2016 முதல் 2022 காலக்கட்டத்தில் கலால்வரி மூலமாக ரூ.16 லட்சம் கோடி வருவாயாக கிடைத்துள்ளதாக மத்திய அமைச்சர் ராமேஸ்வர் டெலி கூறியுள்ளார்.

கொள்ளையடிக்கும் மத்திய அரசு

கொள்ளையடிக்கும் மத்திய அரசு

இந்த பதிலை ஆத்ஆம்மி எம்பி ராகவ் சாதா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து ராகவ் சாதா எம்பி, ‛‛கடந்த ஒரு ஆண்டில் மட்டும் மத்திய அரசு பெட்ரோல் விலையை 78 முறையும், டீசல் விலையை 76 முறையும் உயர்த்தி உள்ளது. இதன்மூலம் பொதுமக்களிடம் இருந்து மத்திய அரசு கொள்ளையடிப்பது தெளிவாக தெரிகிறது. மேலும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படுகிறது. இதனை விடுத்து மத்திய அரசு எதிர்க்கட்சிகளின் குரல்களுக்கு செவிசாய்க்க வேண்டும்'' என கூறியுள்ளார்.

 வாஜ்பாயிடம் இருந்து கற்றுக்கொள்ள...

வாஜ்பாயிடம் இருந்து கற்றுக்கொள்ள...

மேலும், அவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை நினைவுப்படுத்தி, "அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, ஆளும் அரசை போலவே எதிர்க்கட்சிகளும் மரியாதையுடன் நடத்தப்பட்டன. இன்றைய பாஜக, பிரதமர் வாஜ்பாயிடம் இருந்து சில விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்''எனவும் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+