ஹரியானாவில் காங்கிரசுக்கு சுக்கிர திசை? பாஜகவே நினைத்து பார்க்காத எக்ஸிட் போல் முடிவு.. என்ன காரணம்?
டெல்லி: பொதுவாக சட்டசபை தேர்தல்களில் ஏற்கனவே ஆட்சியில் உள்ள கட்சி மீண்டும் ஜெயிப்பது எளிதானது அல்ல.. 5 வருடம், அல்லது 10 வருடம் ஆட்சியில் இருந்த கட்சிகள் மக்களிடையே எதிர்ப்பலையை சந்திப்பார்கள். அந்த வகையில் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் கட்சிகள் ஆட்சிக்கு எதிரான மனநிலையை (anti incumbency) எதிர்கொண்டுள்ளது பாஜக... ஹரியானா தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் அதைத்தான் காட்டுகின்றன.
தமிழ்நாட்டில் 10 வருடம் ஆட்சியில் இருந்த அதிமுக மீது இயல்பாகவே அதிருப்தி அலை எழுந்தது.. இதனால் அதிமுக தோற்று திமுக ஆட்சிக்கு வந்தது. அதேபோல் தான் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் மாறி மாறி ஆளுகின்றன. அபூர்வமாகவே சில மாநிலங்களில் ஆளும் கட்சி மீண்டும் வெற்றி பெறுகிறது.

எனினும் ஹரியானாவை பொறுத்தவரை தற்போது ஆட்சியில் உள்ள பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு கடுமையாக போராடியது. இதுவரை இல்லாத அளவிற்கு வியூகம் வகுத்தது.. ஆனால் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் எதுவுமே பாஜகவிற்கு சாதமாக இல்லை.. ஹரியானாவிலும் ஆட்சி மாற்றத்திற்காக மக்கள் வாக்களித்துள்ளதாக கணிப்புகள் சொல்கின்றன.
மேட்ரிஸ், பியூப்பிள் பல்ஸ், டைனிக் பாஸ்கர், துருவ் ரிசர்ச் என எல்லா கணிப்புகளுமே காங்கிரஸ் தான் முழுமெஜாரிட்டியுடன் ஜெயிக்கும் என்று கூறியுள்ளன. முதலிலேயே சொன்னது போல், பாஜக 10 வருடம் ஆட்சியில் இருந்த காரணத்தால் மக்களிடையே இயல்பாக எழும் அதிருப்தி அலை மற்றும் கூட்டணி கட்சிளுக்காக செய்து கொண்ட சமரசம், ஆட்சியை தக்க வைக்க மேற்கொண்ட சமரசம் என எல்லாமே இந்த தேர்தலில் பாஜகவிற்கு சவாலாக மாறியது. பொதுவாக தேர்தலில் ஜெயிக்க மாட்டோம் என்று நம்ப தொடங்கினால், யாருமே ரிஸ்க் எடுக்க மாட்டார்கள்.. கட்சி தாவலையே விரும்புவார்கள் ,. அப்படியான சூழலையும் பாஜக எதிர்க்கொண்டது.
பாஜக எதிர்க்கொண்ட சவால்கள் சிலவற்றை பார்ப்போம்.. ஹரியானாவில் பாஜக சார்பில் நீண்ட காலமாக முதல்வராக இருந்தவர் மனோகர் லால் கட்டார். இவருக்கும் துணை முதல்வர் துஷ்யந்த் செளதாலாவுக்கும் இடையில் பல்வேறு விஷயங்களில் முரண்பாடு ஏற்பட்டது. இறுதியில் இவர்களது சண்டை, 2024 மக்களவைத் தேர்தலின்போது உச்சமானது. தொகுதிப் பங்கீட்டில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் கூட்டணி முடிவுக்கு வந்தது. இறுதியில் ஆட்சியே பறிபோகும் அபாயம் ஏற்பட்டது. கடைசியில் சுயேச்சை எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் ஆட்சியை பாஜக தக்கவைத்துக் கொண்டது. ஆனாலும் முதல்வர் மனோகர் லால் கட்டார் பதவி இழந்தார். கட்டாரின் உதவியாளராக இருந்த நயப் சிங் சைனி முதல்வரானார். கட்டார் கர்னால் தொகுதியில் வென்று தற்போது மத்திய அமைச்சராக உள்ளார்.
ஹரியானாவில் பாஜக சார்பில் நயப் சிங்கே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தாலும், கோஷ்டி பூசல் காரணமாக உள்கட்சிக்குள்ளேயே பஞ்சாயத்துகள் ஏற்பட்டது. டெல்லி தலைமைக்கு இவர்களை சமாதானம் செய்வதே பெரிய வேலையாக மாறியது.
மறுபக்கம் 2024 மக்களவைத் தேர்தலில் ஐந்தே இடங்களில் மட்டுமே பாஜக வென்றதால் கவலை அடைந்தது. இதனால் தமிழ்நாடு பாணியில் ஒரு லட்சத்துக்கும் குறைவான ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம், வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2,100 உதவித்தொகை என பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் அளித்தது.
ஆனால் பாஜக இவ்வளவு செய்தும் எக்ஸிட் போல் முடிவுகள் இப்படி வரக்காரணம், ராகுல் காந்தியின் பிரச்சாரமும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 2014 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு வெறும் 10 இடங்கள் தான் கிடைத்தது. ஆனால் 2019இல் 31 இடங்களை வென்றது. 2024 மக்களவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் காங்கிரஸ் ஐந்து தொகுதிகளில் வென்றது. இப்படி ஏறுமுகமாக மாறுவதற்கு ராகுல்காந்தியின் பிரச்சாரம் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
விவசாயிகள் பிரச்சனை, வேலைவாய்ப்பின்மை, அக்னிபத் திட்டம், மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் விவகாரம் உள்ளிட்ட விவகாரங்களை முன்னிறுத்தி பாஜகவுக்கு எதிராக ராகுல் தீவிர பிரச்சாரம் செய்தார். இந்நிலையில் தான் இன்று தேர்தல் முடிந்து எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி உள்ளது. முழு மெஜாரிட்டியுடன் காங்கிரஸ் வெல்லும் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. கணிப்புகளை மீறி பாஜக வெல்லமா.. என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
கோவையில் தோட்டம்.. சென்னையில் பிளாட்.. வானதி சீனிவாசன் சொத்து பட்டியல் -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்? -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
அடியோடு ஆட்டம் காணும் இரட்டை இலை... ஸ்டாலின் 2.0.. திரும்பி பார்க்க வைத்த 'இன்சைட் எலெக்ஷன்' சர்வே -
செந்தில் பாலாஜின்னா சும்மாவா.. கரூரில் 4.40-க்கு அண்ணன் - தம்பி காட்டிய அரசியல் வித்தை! மாஸ்டர் மூளை -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்! -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
இதுதான் எங்க கண்டிஷன்.. டிரம்ப்-க்கு செக் வைத்த ஈரான்.. போரில் புதிய திருப்பம்! -
லோன் எடுத்து இருக்கீங்களா? வருகிறது செம சலுகை.. மத்திய அரசு போடும் முக்கிய திட்டம்.. யாருக்கு பயன்? -
180 இடங்களில் திமுக வெல்லும்.. தடம் தெரியாமல் வீழும் தவெக.. அப்போ அதிமுக? வெளியான முக்கிய சர்வே!












Click it and Unblock the Notifications