லோன் ஆப்கள்.. மத்திய அரசின் தரமான சம்பவம்.. லோக்சபாவில் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட தகவல்
டெல்லி: லோன் ஆப் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்கள், மக்களை மோசடி செய்து வருவதாக புகார்கள் எழுந்த காரணத்தால், 2500க்கும் மேற்பட்ட மோசடி லோன் ஆப்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அந்த நிறுவனத்தால் நீக்கப்பட்டிருப்பதாக லோக்சபாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
லோன் ஆப்கள் புதிது புதிதாக வந்து கடன் கொடுப்பது போல் கொடுத்து மோசடியில் ஈடுபட்டன. ஏழ்மை நிலையில் இருக்கும் இளைஞர்கள் தெரியாமல் கடன் வலையில் போய் சிக்கி கொள்கிறார்கள்.. அவர்களை அனைத்து தகவல்களையும் மொபைல் மூலம் சேகரிக்கும் நிறுவனங்கள் கடனை திருப்பித்தராவிட்டால் பொதுவெளியில் அசிங்கப்படுத்துகின்றன. மேலும் கடன் வழங்குவதில் மோசமான அணுகுமுறையையும் கடைபிடிக்கின்றன இந்த லோன் ஆப்கள் பல அரசின் அனுமதி இல்லாமலும் செயல்பட்டு வந்தன.. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பலரும் கோரிக்கை வைத்து வந்தார்கள்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் கேள்வி நேரத்தின் போது, லோன் ஆப்கள் தொடர்பான கேள்விக்கு மத்திய நிதியமைச்சர் எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில் நிர்மலா சீதாராமன் கூறுகையில், லோன் ஆப்கள் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்கள், மக்களை மோசடி செய்து வருவதாக நாடு முழுவதும் புகார்கள் வருகின்றன. இதுதொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அமைப்புகளுடன் மத்திய அரசு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தன.
மோசடி கடன் ஆப்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், சட்டபூர்வமாக கடன் செயலிகள் பட்டியலை மத்திய அரசிடம் ரிசர்வ் வங்கியும் அளித்தது. அதை 'கூகுள்' நிறுவனத்துடன் மத்திய அரசு பகிர்ந்து கொண்டு நடவடிக்க வலியுறுத்தியது.
இதனிடையே கூகுள் நிறுவனம் தங்களுடைய 'பிளே ஸ்டோரில்' சட்டபூர்வமான ஆப்களை மட்டுமே இடம்பெற செய்ய வேண்டும் என்று முடிவு செய்தது. கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை 3,500 கடன் ஆப்கள் முதல் 4 ஆயிரம் கடன் ஆப்கள் வரை கூகுள் ஆய்வு செய்தது.
அதன் அடிப்படையில், 2500க்கும் மேற்பட்ட மோசடி கடன் ஆப்களை தனது 'பிளே ஸ்டோரில்' இருந்து நீக்கியும், முடக்கியும் நடவடிக்கை எடுத்திக்கிறது. மேலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு, ரிசர்வ் வங்கி, வங்கிகள் ஆகியவை நடவடிக்கை எடுத்து வருகின்றன" இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 'முத்ரா' திட்டத்தின்கீழ் ரூ.26 லட்சத்து 12 ஆயிரம் கோடி மதிப்புள்ள 44 கோடி கடன்கள் வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். முத்ரா திட்டம் என்பது பிரதமர் மோடி, கடந்த 2015, ஏப்ரல் மாதம் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட திட்டம் ஆகும். இத்திட்டத்தின் கீழ், மக்கள் 10 லட்சம் ரூபாய் வரை எந்த அடமானமும் இல்லாமல் கடன் பெறலாம்.. இந்த திட்டத்தில் 3 வகைகளில் மக்களுக்கு கடன் வழங்கப்படுகிறது.. இந்த 3 வகைகளிலுமே வேறுவேறு கடன் வசதிகள் இருக்கின்றன..அதன்படி "சிஷு" (Shishu) என்ற திட்டத்தின்கீழ் ரூ.50,000 வரையிலும், "கிஷோர்" என்ற திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரையும், "தருண்" என்ற திட்டத்தின்மூலம், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன்கள் வழங்கப்படுகின்றன.
புதிதாக தொழில் தொடங்க ஆசைப்படுவோருக்கு மட்டுமே இந்த முத்ரா கடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. உற்பத்தி, வர்த்தகம், சேவைத் துறைகள், கோழிப்பண்ணை, பால் பண்ணை, தேனீ வளர்ப்பு போன்ற விவசாயம் தொடர்பான தொழில்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படுகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications