தீபாவளி நெருங்குதுல்ல.. ரயில்வே வெளியிட்ட முக்கிய சேதி.. 283 சிறப்பு ரயில்கள்: பயணிகள் செம ஹேப்பி!
டெல்லி: தீபாவளி, சாத், நவராத்திரி பண்டிகைகளை முன்னிட்டு நாடு முழுவதும் 283 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.
அக்டோபர் மாதம் தொடங்கினாலே பண்டிகைக் காலம் தான். ஆயுத பூஜை, நவராத்திரி கொண்டாட்டங்கள், தீபாவளி என அடுத்தடுத்து வரிசையாக பண்டிகைகள் களைகட்டும். பொங்கல் வரை இந்த பண்டிகைக்கால கொண்டாட்டங்கள் தொடரும். இந்நிலையில், சொந்த ஊர்களுக்கு பயணிக்க ரயில் டிக்கெட் கிடைக்காமல் லட்சக்கணக்கான பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அடுத்தடுத்து வரும் பண்டிகைகளை ஒட்டி, நாடு முழுவதும் 283 சிறப்பு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

பூஜை, தீபாவளி, சாத் பண்டிகைகளை ஒட்டி 283 சிறப்பு ரயில்கள் 4,480 ட்ரிப்கள் பயணிக்கும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், வழக்கமாக இயக்கப்படும் ரயில்களில் கூடுதலாக 6 ஆயிரம் பெட்டிகள் வரை இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வேயின் இந்த அறிவிப்பு பண்டிகை கால கூட்ட நெரிசலை குறைக்க பெரிதும் உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பு ரயில்கள் என அறிவிக்கப்பட்டுள்ள 283 ரயில்களில் தென் மத்திய ரயில்வேக்கு 58 சிறப்பு ரயில்கள் கிடைத்துள்ளன. இவை 404 ட்ரிப்கள் பயணிக்கும். மேற்கு ரயில்வே நிர்வாகம் 36 சிறப்பு ரயில்கள் மூலம் 1,267 ட்ரிப்களை அடிக்க உள்ளது.
வடமேற்கு ரயில்வே நிர்வாகம் 24 சிறப்பு ரயில்கள் மூலம் 1,208 ட்ரிப்களை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. வடக்கு ரயில்வே 34 சிறப்பு ரயில்கள் மூலம் 228 ட்ரிப்கள் இயக்கப்படவுள்ளது. தெற்கு ரயில்வேயை பொறுத்தவரை 10 சிறப்பு ரயில்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 58 ட்ரிப்களை அடிக்கும். தென்கிழக்கு ரயில்வே 8 சிறப்பு ரயில்களையும் (64 ட்ரிப்கள்), தென்மேற்கு ரயில்வே 11 சிறப்பு ரயில்களையும் (27 ட்ரிப்கள்) இயக்க உள்ளது.
கடந்த காலங்களில் பயணித்த பயணிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு ரயில்வே மண்டலத்திற்கும் சிறப்பு ரயில்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலரும் ஒரே நேரத்தில் டிக்கெட் புக் செய்து வருவதால் பலர் காத்திருப்பு பட்டியலில் இருந்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு கூடுதல் பெட்டிகளை இணைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக ரயில்வே துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications