மேகதாது அணை, பெங்களூர் குடிநீர் பஞ்சம்- காவிரி ஆணையக மீட்டிங்கில் பஞ்சாயத்தை கூட்டப் போகும் கர்நாடகா
டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இன்றைய காவிரி ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை மற்றும் பெங்களூர் குடிநீர் பற்றாக்குறை ஆகியவற்றை கர்நாடகா எழுப்பக் கூடும் என தெரிகிறது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி காவிரி நதிநீர் பகிர்வுக்காக அமைக்கப்பட்டது காவிரி மேலாண்மை ஆணையம். காவிரி ஒழுங்காற்று குழுவானது கர்நாடகா அணைகளைப் பார்வையிட்டு நீர் இருப்பை ஆய்வு செய்து தமிழ்நாட்டுக்கு எவ்வளவு நீரை திறந்துவிடலாம் என காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரைக்கும். இப்பரிந்துரையின் அடிப்படையில் விவாதித்து தமிழ்நாட்டுக்கான நீர் பகிர்வு உத்தரவை காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஹல்தர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளா மாநில அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
காவிரி ஒழுங்காற்று குழுவானது தமிழ்நாட்டுக்கு 2.8 டிஎம்சி நீரை திறக்க கடந்த 21-ந் தேதி பரிந்துரைத்தது. ஆனால் கர்நாடகாவோ குடிநீர் பஞ்சம் இருக்கிறது; காவிரி நீரை திறக்க இயலாது என கூறியது. கர்நாடகாவின் பெங்களூர் குடிநீர் பஞ்சம், சர்வதேச தலைப்புச் செய்தியாகவும் மாறிவிட்டது.
அதேபோல காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்ட அனுமதிக்கமாட்டோம் என தமிழ்நாட்டில் ஆளும் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. இதற்கு கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு மட்டுமல்ல எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்கிறது கர்நாடகா.
இதனால் இன்றைய காவிரி ஆணையக் கூட்டத்தில் பெங்களூர் குடிநீர் பஞ்சம், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது ஆகியவற்றை கர்நாடகா எழுப்பும். ஆனால் இந்த விவகாரங்களை விவாதிக்க அதிகாரமே இல்லாதது காவிரி மேலாண்மை ஆணையம் என்பது தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications