Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்று முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடரின் 2-வது அமர்வு- நீட் விவகாரத்தை விவாதிக்க கோரி திமுக நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில் நீட் மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டிருப்பது குறித்து விவாதிக்க வேண்டும் என திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

நடப்பாண்டின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி தொடங்கியது. ஆண்டின் முதலாவது கூட்டத் தொடர் என்பதால் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரு சபைகளில் உரையாற்றினார். இதனையடுத்து பிப்ரவரி 1-ந் தேதி மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி கடந்த பிப்ரவரி 11-ந் தேதி நிறைவடைந்தது.

ஜம்மு காஷ்மீர் பட்ஜெட்

ஜம்மு காஷ்மீர் பட்ஜெட்

இதனையடுத்து பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கியது. இன்றைய கூட்டத்தின் தொடக்கத்தில் தமிழக முன்னாள் எம்.பி. சிங்காரவடிவேல் உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத் தொடர் அடுத்த மாதம் ஏப்ரல் 8-ந் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த முதல் அமர்வானது கொரோனா பரவல் அதிகம் இருந்ததால் இரு சபைகளும் தனித்தனி நேரங்களில் நடத்தப்பட்டன. நாட்டில் தற்போது கொரோனா பரவல் குறைந்து உள்ளதால் இரு சபைகளில் வழக்கம் போல முற்பகல் 11 மணிக்கு கூடியது. இன்று ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

உக்ரைன் விவகாரம்

உக்ரைன் விவகாரம்

இந்த கூட்டத் தொடரில் உக்ரைன் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி குறைப்பு, பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு அச்சம் உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும். உக்ரைன் விவகாரம், உக்ரைனில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டது தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.அண்மையில் 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நிறைவடைந்தன. இதில் 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியை தக்க வைத்திருக்கிறது. பஞ்சாப்பில் மட்டும் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்துள்ளது. இந்த சூழ்நிலையில் இன்று கூடும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகளின் நெருக்கடியை மத்திய அரசு எளிதாக எதிர்கொள்ளும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நீட் குறித்து நோட்டீஸ்

நீட் குறித்து நோட்டீஸ்

இதனிடையே நாடாளுமன்றத்தில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளன. தமிழக அரசின் நீட் மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்டகாலமாக கிடப்பில் போட்டுள்ளது குறித்து விவாதிக்க லோக்சபாவில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார். மேலும் விசிக எம்.பி. ரவிக்குமார், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் ஆணவக்கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்றாமல் ஒன்றிய அரசு தாமதிப்பது ஏன்? இன்று நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளேன் எனவும் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பகவந்த் மான் ராஜினாமா

பகவந்த் மான் ராஜினாமா

பஞ்சாப் மாநில முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான் இன்று தமது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பகவந்த் மான், தமது மண்ணின் மகனுக்காக வாக்களித்த பஞ்சாப் வாக்காளர்களுக்கு மிக்க நன்றி. பஞ்சாப் எனக்கு மிகப் பெரிய பொறுப்பை கொடுத்துள்ளது என்றார். பின்னர் லோக்சபா நடவடிக்கைகளிலும் பகவந்த் மான் பங்கேற்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+