அடேங்கப்பா! இந்தியாவில் கடந்த 5 ஆண்டில் மட்டும் இத்தனை சாதி, மத கலவரங்களா? அதிர வைத்த புள்ளி விவரம்!
டெல்லி: இந்தியாவில் கடந்த 2016 முதல் 2020 ஆம் ஆண்டு வரை 2.76 லட்சம் கலவர வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் தெரிவித்து இருக்கிறார்.
இந்தியாவில் நடக்கும் மதக் கலவரங்கள் மற்றும் கும்பல் படுகொலைகள் தொடர்பான ஆவணங்களை மத்திய அரசு சேகரிக்கிறதா? என மக்களவையில் காங்கிரஸ் எம்.பி சசி தரூர், பாஜக எம்.பி. சந்திர பிரகாஷ் ஜோஷி ஆகியோர் கேள்வி எழுப்பினர்.
இந்தியாவில் குறிப்பாக ராஜஸ்தானில் கும்பல் படுகொலைகளும், கலவரங்களும் அதிகரித்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

மத்திய இணை அமைச்சர் பதில்
இதற்கு மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய், "தேசிய குற்ற ஆவண காப்பகம், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நடக்கும் குற்றங்களையும், வழக்குகளையும் இந்திய தண்டனைச் சட்டம், சிறப்பு சட்டங்கள், மாநில சட்டங்களின் அடிப்படையில் வகைப்படுத்தி பதிவு செய்து வருகிறது.

கும்பல் தாக்குதல்கள் குறித்து பதில் இல்லை
எனவே கும்பல் தாக்குதல்களை தனியாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வகைப்படுத்தவில்லை. இந்தியாவில் கலவர வழக்குகளை பொறுத்தவரை, சாதி, மத அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டு உள்ளன." எனக்கூறிய அவர், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை நடந்த சாதி, மத கலவரங்கள் தொடர்பான ஆவணங்களை சமர்பித்தார்.

எந்தெந்த ஆண்டுகளில் எத்தனை கலவரங்கள்?
அதில், குறிப்பாக 2016 ஆம் ஆண்டில் மட்டும் 61,964 கலவரங்கள் நடந்துள்ளதாகவும், அவற்றில் 860 கலவரங்கள் சாதி அல்லது மத காரணங்களுக்காக நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 2017 ஆம் ஆண்டில் மட்டும் 58,880 கலவரங்கள் நடந்துள்ளன. அவற்றில் 723 கலவரங்கள் சாதி, மத காரணங்களுக்காக நடந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

3,399 சாதி, மதக்கலவரங்கள்
2018 ஆம் ஆண்டில் மட்டும் 57,828 கலவரங்கள் நடந்துள்ளன. அதில் 512 கலவரங்கள் சாதி, மத காரணங்களுக்காக நடந்துள்ளதாகவும் கூறப்பட்டு இருக்கிறது. 2019 ஆம் ஆண்டில் நடந்த 45,985 கலவரங்களில் 438 கலவரங்கள் சாதி, மத காரணங்களுக்காக நடந்துள்ளன. 2020 ஆம் ஆண்டில் 51,606 கலவரங்களில் நடந்து இருக்கின்றன. அதில் 857 சாதி, மத கலவரங்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் மொத்தமாக 2,76,273 கலவரங்கள் கடந்த 5 ஆண்டுகளில் நடந்துள்ளதும், அதில், 3,399 கலவரங்கள் சாத, மதத்திற்காக நடைபெற்றதும் உறுதியாகி இருக்கிறது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications