3% அகவிலைப்படி உயர்வு உறுதியானது.. உங்களின் மாத சம்பளம் எவ்வளவு உயரும் தெரியுமா? கணக்கு என்ன?
சென்னை: தீபாவளி பண்டிகைக் காலத்திற்கு முன்பாக அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி (DA) மூன்று சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உயர்வு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு ஜூலை 1 முதல் (பின்தேதியிட்டு) அமலுக்கு வரும்.
இந்த ஆண்டு அகவிலைப்படி உயர்வு வருவது இது இரண்டாவது முறை. கடந்த மார்ச் மாதம் இரண்டு சதவீத உயர்வு அறிவிக்கப்பட்டது. அப்போது அகவிலைப்படி அடிப்படைச் சம்பளத்தில் 53 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக உயர்ந்தது. இதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னர், அதாவது கடந்த ஆண்டு அக்டோபரில் மூன்று சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூன்று சதவீத அகவிலைப்படி உயர்வு
அகவிலைப்படி என்பது அரசு ஊழியர்களுக்கு பணவீக்கத்தின் தாக்கத்தை ஈடுசெய்வதற்காக வழங்கப்படுகிறது. இந்த மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு, தொழில்துறை ஊழியர்களுக்கான நுகர்வோர் விலை குறியீட்டின் (CPI) அடிப்படையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருமுறை வழங்கப்படும் அகவிலைப்படி திருத்தங்களுக்கு இந்த தரவுகள்தான் அடிப்படை.
இந்த புதிய உயர்வு காரணமாக, அடிப்படைச் சம்பளம் ரூ. 60,000 உள்ள ஊழியருக்கு, மார்ச் மாத உயர்விற்குப் பிறகு கிடைத்த ரூ. 33,000 அகவிலைப்படியுடன் சேர்த்து, கூடுதலாக ரூ. 34,800 கிடைக்கும்.
அகவிலைப்படி உயர்வு கணக்கிடும் முறை
இந்த 3% அகவிலைப்படி உயர்வு ஊழியர்களுக்கு எப்படிப் பிரதிபலிக்கும் என்பதைப் பார்ப்போம். உதாரணமாக, ஒரு ஓய்வூதியதாரரின் அடிப்படை ஓய்வூதியம் ₹9,000 ஆக இருந்தால், தற்போது 55% அகவிலைப்படி அடிப்படையில் ₹4,950 கிடைக்கிறது. மொத்தமாக ₹13,950 பெறுகிறார். DA 58% ஆக உயர்ந்தால், அவர் ₹5,220 பெறுவார். இதன் மூலம் மொத்தமாக ₹14,220 கிடைக்கும். அதாவது, மாதத்திற்கு ₹270 கூடுதலாகப் பெறுவார்.
அதேபோல, ₹18,000 அடிப்படை ஊதியம் பெறும் ஒரு ஊழியருக்கு, தற்போது 55% DA உடன் ₹9,900 கிடைக்கிறது. மொத்தமாக ₹27,900 ஆகிறது. DA 58% ஆக உயரும்போது, ₹10,440 ஆக அதிகரித்து, மொத்த ஊதியம் ₹28,440 ஆக உயரும். இதன் மூலம் மாதத்திற்கு ₹540 கூடுதலாகக் கிடைக்கும்.
இந்த அகவிலைப்படி உயர்வு 7வது ஊதியக் குழுவின் கீழ் நடைபெறும் கடைசி உயர்வு என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது. 7வது ஊதியக் குழுவின் காலம் டிசம்பர் 31, 2025 அன்று முடிவடைகிறது. 8வது ஊதியக் குழு செயல்முறையை அரசு எவ்வாறு விரைவுபடுத்துகிறது என்பதில் தற்போது அனைவரின் கவனமும் உள்ளது.
எட்டாவது ஊதியக் குழு
ஊதியங்கள் மற்றும் படிகளின் அடுத்தடுத்த திருத்தங்கள் குறித்து ஜனவரியில் அறிவிக்கப்படும் எட்டாவது ஊதியக் குழு முடிவெடுக்கும். எனினும், அக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் அதன் விதிமுறைகள் (ToR) குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
'ஃபிட்மென்ட் ஃபாக்டர்' எனப்படும் சம்பள உயர்வு காரணி மூலம் உயர்வு நிர்ணயிக்கப்படும். இது அடிப்படைச் சம்பளத்துடன் கணக்கிடப்படும். வல்லுநர்களின் மதிப்பீட்டின்படி, இந்த காரணி 1.83 முதல் 2.86 வரை இருக்கலாம். இதன் மூலம் சுமார் 3 சதவீதம் வரை ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
இருப்பினும், தற்போதைய 55 சதவீத அகவிலைப்படி, ஊதியக் குழுவின் பரிந்துரைகள் ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வந்ததும், பூஜ்யமாக மாற்றப்பட்டு அடிப்படைச் சம்பளத்துடன் இணைக்கப்படலாம். இது மொத்த உயர்வை சற்றே குறைத்தாலும், ஓய்வூதியங்கள் அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படியுடன் இணைக்கப்பட்டிருப்பதால் பயனுள்ளதாகவே இருக்கும்.












Click it and Unblock the Notifications