கைரேகை, கருவிழிக்கு அல்வா.. கோடிணக்கணக்கில் ஸ்வாகா.. வங்கிக்கு விபூதி அடித்த கும்பல்
டெல்லி: தலைநகர் டெல்லியில் போலி ஆவணங்கள் கொடுத்து கடன் பெற்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாராலும் ஏமாற்ற முடியாது என்று கூறப்படும் கைரேகை, கருவிழி பதிவையும் மாற்றி நூதன முறையில் மோசடி செய்தது அம்பலம் ஆகி உள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள தனியார் வங்கி கிளையில் ஒரு கும்பல் ஆன்லைன் மூலம் வங்கி கணக்கு தொடங்கியது. இதற்காக அவர்கள் ஆதார் உள்பட அனைத்து ஆவணங்களையும் அப்லோட் செய்துள்ளனர். அதன் மூலம் அவர்களை தங்கள் வாடிக்கையாளர்களாக வங்கி நிர்வாகம் ஏற்றுக்கொண்டது.
பின்னர் தாங்கள் கார் வியாபாரம் செய்வதாக கூறி கடன் கேட்டுள்ளனர். இதன் அடிப்படையில் அந்த வங்கி 2.5 கோடி வரை கடன் கொடுத்துள்ளது. அந்த பணத்தை வைத்து நியாயமான முறையில் கார்களை வாங்கி விற்பது போல் வாங்கி விற்று உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளனர்.

போலி ஆவணங்கள்
ஆனால் கடந்த வங்கிக்கு மட்டும் எந்த தவனையையும் திருப்பிச் செலுத்தவில்லை. கடன் கொடுத்தும் வராததால், மோசடி கும்பலை வங்கி ஊழியர்கள் தேடிய போது, அவர்கள் கொடுத்த ஆவணங்கள் அனைத்தும் போலியானது என்பது தெரியவந்தது.

வங்கி ஊழியர்கள்
இதனால் அவர்களை கண்டுபிடிக்க வங்கி ஊழியர்களால் முடியவில்லை. இதனால் வங்கி நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ஜெய்சவுத்ரி, சுரேந்தர் மற்றும் குல்தீப் ஆகிய 3 பேர் கொண்ட மோசடி கும்பலை பொறிவைத்து பிடித்தனர்.

கைரேகை மாற்றம்
3 பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. யாராலும் ஏமாற்ற முடியாது என்று நம்பப்படும் கருவிழி மற்றும் கைரேகை பதிவுகளை மாற்றி உள்ளனர். இடது கை ரேகைக்கு பதிலாக வலது கை ரேகையையும், வண்ண லென்ஸை பயன்படுத்தி கருவிழி பதிவையும் மாற்றி உள்ளனர்.

20 கணக்குகள்
அவற்றை பயன்படுத்தி வங்கிகளில் நூதன முறையில் 20க்கும் மேற்பட்ட கணக்குகளை தொடங்கி மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து இரண்டு கார்கள் மற்றும் 8 லட்சம் ரூபாய் மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளது. அவர்கள் இதேபோன்று எந்தெந்த நிறுவனங்களில் மோசடி செய்துள்ளனர். பணத்தை எங்கு முதலீடு செய்துள்ளனர் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். கைரேகை, கருவிழி-க்கே அல்வா கொடுத்து கோடிக்கணக்கில் ஏமாற்றிய சீட்டிங் கும்பலால் வங்கிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.












Click it and Unblock the Notifications