Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மத்திய அமைச்சர் ஆனார் ரக்‌ஷா கட்சே.. இளமையிலேயே சாதனையோடு சோதனையையும் சந்தித்தவர்.. யார் இவர்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நரேந்திர மோடி தலைமையிலான அரசில் மத்திய இணை அமைச்சராக பதவியேற்றுள்ளார் பாஜக எம்.பி ரக்‌ஷா கட்சே. மகாராஷ்டிர மாநிலத்தில் 3வது முறையாக எம்.பியாகியுள்ள ரக்‌ஷா, முதல் முறையாக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.

2024 மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிர மாநிலம் ரேவர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ரக்ஷா கட்சே வெற்றி பெற்றார். நரேந்திர மோடி மற்றும் 72 அமைச்சர்கள் இன்று ராஷ்டிரபதி பவனில் பதவியேற்றுள்ள நிலையில், ரக்ஷா கட்சேவுக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்து உள்ளது.

Narendra Modi BJP NDA cabinet ministers

யார் இந்த ரக்‌ஷா கட்சே?: ரக்‌ஷா கட்சே ரேவர் தொகுதியில் இருந்து இரண்டு முறை எம்.பி.யாக இருந்தவர். 2014 லோக்சபா தேர்தலில் 26 வயதில் வெற்றி பெற்ற இளம் எம்.பியான அவர், மீண்டும் 2019 இல் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ரக்ஷா காட்சே, ஜல்கான் மக்களவைத் தொகுதியில் 3.36 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (சரத் பவார்) ஸ்ரீராம் பாட்டீலை தோற்கடித்தார்.

கணவர் தற்கொலை: ரக்‌ஷா கட்சே, கணினி அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றவர். இவரது கணவர் நிகில் கட்சே, 2013 இல் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ரக்‌ஷா கட்சேவின் மாமனார் ஏக்நாத் கட்சே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்து வருகிறார்.

ரக்ஷா காட்சே தனது அரசியல் பயணத்தை 2010 இல் தொடங்கினார். இவர் மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள தல்-முக்தைநகரின் பஞ்சாயத்து தலைவராக செயல்பட்டார். பின்னர், அவர் ஜல்கான் மாவட்ட கவுன்சில் உறுப்பினராகவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ரக்‌ஷா கட்சேவின் மாமனார் ஏக்நாத் கட்சே பாஜகவில் முக்கியமான தலைவராக இருந்தார். அவர் மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்டவர். தற்போது 2020 ஆம் ஆண்டு முதல் என்.சி.பி கட்சி சார்பில் எம்.எல்.சியாக இருந்து வருகிறார்.

Narendra Modi BJP NDA cabinet ministers

ஏக்நாத் கட்சே மருமகள்: எனினும், ஏக்நாத் கட்சே விரைவில் பாஜகவில் இணையக்கூடும் எனக் கூறப்படுகிறது. என்.சி.பி - சரத் பவார் கட்சியின் எம்.எல்.சியாக இருந்த போதிலும், நடந்து முடிந்த தேர்தலில் தனது மருமகள் ரக்‌ஷாவுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தார் ஏக்நாத் கட்சே.

ரக்ஷாவிற்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது வடக்கு மகாராஷ்டிராவில் உள்ள பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் ஆதரவை பாஜகவுக்கு தொடர்ந்து நிலை நிறுத்தும் என மகாராஷ்டிரா அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 6 எம்.பி.க்கள் நிதின் கட்கரி, பியூஷ் கோயல், ரக்ஷா கட்சே, முரளிதர் மொஹோல், ராம்தாஸ் அத்வாலே மற்றும் பிரதாப்ராவ் ஜாதவ் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். மத்திய அமைச்சர்களாக இருந்த நாராயண் ரானே, டாக்டர் பகவத் காரத் ஆகியோருக்கு புதிய அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+