வழக்கத்தை விட 30% கூடுதலாக எல்பிஜி உற்பத்தி.. சிலிண்டர் தட்டுப்பாடு வராது! மத்திய அரசு விளக்கம்!
டெல்லி: ஈரான் போர் காரணமாக, இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. நிலைமையை சமாளிக்க, வழக்கத்தை விட 30% எல்பிஜி உற்பத்தி அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும், எனவே சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து பயப்பட தேவையில்லை என்றும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
மேற்கு ஆசியாவில் அரசியல் பதட்டங்கள் இருந்தாலும், எல்பிஜி விநியோகம் தடையின்றி உள்ளது என்று அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அதிகாரிகள், சுத்திகரிப்பு நிலையங்கள் 100% திறனில் இயங்கி வருகிறது என்று விளக்கமளித்துள்ளனர்.

வீடுகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களுக்கு தடையற்ற எல்பிஜி சேவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சமீபத்திய தேவை அதிகரிப்பைத் தொடர்ந்து, பொதுமக்கள் பீதியடைந்து முன்பதிவு செய்வதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இது விநியோக வலையமைப்பில் செயற்கையான அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும், நாட்டின் 1 லட்சம் சில்லறை விற்பனை நிலையங்களிலும் போதுமான எரிவாயு உள்ளது எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எல்பிஜி விநியோக சங்கிலி வலுவாக உள்ளதாகவும், ஹார்முஸ் நீரிணை வழியாக விநியோகம் இருந்தாலும், வரத்து போதுமானதாக இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் பதுக்கல்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications