சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினருடன் பயங்கர மோதல்- 31 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை!
டெல்லி: சத்தீஸ்கர் மாநிலம் இந்திராவதி தேசிய பூங்கா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த மோதலில் 31 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தற்போதைய தகவல்களின் படி பாதுகாப்புப் படை தரப்பில் 2 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா முழுவதும் ஆயுதப் போராட்டம் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு நக்சலைட் இயக்கங்கள் (ஆயுதப் போராட்டம் நடத்தும் இடதுசாரிகள்) இணைந்து உருவானதுதான் இன்றைய மாவோயிஸ்டுகள் இயக்கம். நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் கை ஓங்கி இருந்த காலமும் இருந்தது.

தெலுங்கானா, ஒடிஷா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பீகார், மேற்கு வங்கம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு என மத்திய- கிழக்கு மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் பரவலாக வேர்பிடித்திருந்தது மாவோயிஸ்டுகள் இயக்கம். இவர்களது பக்கபலமாக இருந்தவர்கள் பழங்குடிகள். பெரும்பாலான மலை பிரதேசங்கள் வளர்ச்சி அடையாத, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி தாக்கத்தை ஏற்படுத்தாத காலத்தில் மாவோயிஸ்டுகள் கை ஓங்கி இருந்தது.
ஆனால் கடந்த 15 ஆண்டுகளில் மாவோயிஸ்டுகள் படிப்படியாக அழித்தொழிக்கப்பட்டு வருகின்றனர். மாவோயிஸ்டுகளுக்குப் புகலிடங்களாக இருந்த வனப்பகுதிகள், பழங்குடிகள் மய்ய நீரோட்டத்தில் இணைக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மாவோயிஸ்டுகள், இந்தியாவில் இறுதி அத்தியாயத்தில் இருக்கின்றனர்.
சத்தீஸ்கர், ஒடிஷா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநில எல்லைகள் இணையும் பகுதிகளில் மட்டுமே மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக சத்தீஸ்கரின் தண்டேவடா, பஸ்தார் வனப்பகுதிகள் இன்னமும் மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அங்கு பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு மாவோயிஸ்டுகளை அழித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டம் இந்திராவதி தேசிய பூங்கா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த மோதல் பல மணிநேரங்களாக நீடித்தது.
இம்மோதலில் மொத்தம் 31 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படை தரப்பில் 2 வீரர்கள், வீர மரணம் அடைந்துள்ளனர்; மேலும் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். அண்மைக்காலத்தில் சத்தீஸ்கரில் பெரும் எண்ணிக்கையில் மாவோயிஸ்டுகள் அழிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications