மெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்ததாக தடுத்து வைக்கப்பட்ட 311 இந்தியர்கள் அந்நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நாளை காலை டெல்லியை வந்தடைவர்.

அமெரிக்காவுக்குள் மெக்சிகோ வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதனை மெக்சிகோ தடுக்க வேண்டும் என அமெரிக்கா கடும் நிலைப்பாட்டை எடுத்து வருகிறது.
இந்நிலையில் மெக்சிகோவில் பல்வேறு மாகாணங்களில் சட்டவிரோதமாக நுழைந்தததாக 311 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களிடம் உரிய பயண ஆவணங்கள் இல்லை. இதனால் தடுத்து வைக்கப்பட்ட இவர்களது விவரங்களை இந்திய அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இதனையடுத்து 311 பேரையும் விமானம் மூலம் மெக்சிகோ அரசு நாடு கடத்தி உள்ளது. 311 நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுடன் வரும் விமானம் நாளை காலை டெல்லியை வந்தடைய உள்ளது.












Click it and Unblock the Notifications