34 கோடி முத்ரா யோஜனா கணக்குகள் உருவாக்கப்பட்டு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.. நிர்மலா சீதாராமன்
டெல்லி: கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. பெண் தொழில் முனைவோர்களுக்கு இதுவரை 34 கோடி முத்ரா யோஜனா கணக்குகள் உருவாக்கப்பட்டு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் உரையுடன் நேற்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிட இருக்கிறது. இதனால், இன்று இடைக்கால பட்ஜெட் செய்யப்பட்டது.

தேர்தல் முடிந்த பிறகு அமையும் புதிய அரசு, முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. பட்ஜெட் தயாரிப்பு பணிகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பே மத்திய நிதி அமைச்சகம் தொடங்கியது. பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடும் பணி கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கியது. அன்று மத்திய நிதி அமைச்சக அலுவலகத்தில், அல்வா தயாரிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
34 கோடி முத்ரா யோஜனா கணக்குகள்: இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் தான் இன்று காலை 11 மணிக்கு நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். நிர்மலா சீதாராமன் கூறியதாவது:- கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. பெண் தொழில் முனைவோர்களுக்கு இதுவரை 34 கோடி முத்ரா யோஜனா கணக்குகள் உருவாக்கப்பட்டு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
ரூ. 30 கோடி கடனுதவி: இளைஞர்களுக்கு 22.5 லட்சம் கோடி தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்பட்டது நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. 7 ஐஐடி, 7 ஐஐஎம், 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன பெண் தொழில்முனைவோருக்கு 30 கோடி முறை கடனுதவி பெண் தொழில் முனைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது 43 கோடி இளைஞர்களுக்கு தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்பட்டது.
1.40 கோடி இந்தியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் புதிய தேசிய கல்வி கொள்கையால் மிகப் பெரும் மாற்றம். விளையாட்டுத்துறையில் இந்தியா அதிக பதக்கங்களைப் பெற்று வருகிறது. 80 கிராண்ட் மாஸ்டர்கள் இந்தியாவில் உள்ளனர் முத்ரா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ30 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது திறன்மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3,000 ஐடிஐக்கள் தொடங்கப்பட்டுள்ளன. லட்சத்திவில் சுற்றுலா உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 40 ஆயிரம் சாதாரண ரயில் பெட்டிகள் வந்தே பரத் ரயில் திட்ட பெட்டிகளக மாற்றப்படும் என்று பேசினார்.
முத்ரா யோஜனா திட்டம்: முத்ரா யோஜனா திட்டம், கடந்த 2015, ஏப்ரல் 8 ஆம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைத்தார். யாருக்கெல்லாம் தொழில் தொடங்க விருப்பமோ அவர்களுக்கு மத்திய அரசு நிதியுதவியை வழங்குவதுதான் முத்ரா திட்டம். அந்த வகையில், கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய் வரை இந்த திட்டத்தின்கீழ் கடன் பெறலாம் மத்திய அரசு இந்த கடன் உதவியை பொதுமக்களுக்கு வழங்க காரணம், வேலைவாய்ப்பு இன்மையை இந்தியாவிலிருந்து நீக்கும் நோக்கத்தில்தான்.
அதுமட்டுமல்ல, சாமான்ய மக்களும் தொழில்முனைவோராக உயரலாம்.. அத்துடன், சிறு வணிகர்களும் தங்களது நிதி தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு, தங்கள் தொழிலையும் விரிவுபடுத்தி கொள்ளலாம். மொத்தம் 3 வகைகளில், இந்த திட்டத்தின்கீழ் கடன் வழங்கப்படுகிறது. இந்த 3 வகைகளிலுமே வேறு வேறு கடன் வசதிகள் இருக்கின்றன. குறிப்பாக, "சிஷு" (Shishu) என்ற திட்டத்தின் கீழ் ரூ.50,000 வரையில் கடன் தரப்படுகிறது. "கிஷோர்" என்ற திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரையும், "தருண்" என்ற திட்டத்தின் மூலம், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன்கள் வழங்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications