ஒரே மருத்துவமனையில் 37 டாக்டர்களுக்கு கொரோனா.. தடுப்பூசி போட்டவர்களுக்கும் பாஸிட்டிவ்!
டெல்லி: டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் 37 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
தடுப்பூசி போட்டுக் கொண்ட இளைஞர்கள் பலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா 2-வது அலை
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக வீசி வருகிறது. கொரோனா முதல் அலையை விட தற்போது தினமும் 90,000- க்கு மேல் தினசரி பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, குஜராத், கேரளா, பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய 10 மாநிலங்களில் மட்டும் நாட்டின் மொத்த பாதிப்பில் 84.21 சதவீதம் உள்ளன.

டெல்லியில் அதிவேக பாதிப்பு
இந்தியாவின் தலைநகர் டெல்லியிலும் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதி வேகமாக பரவி வருகிறது. டெல்லியில் வியாழக்கிழமை 7,437 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 24 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் டெல்லியில் மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

37 மருத்துவர்களுக்கு தொற்று உறுதி
டெல்லியில் சர் கங்கா ராம் மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு 37 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த 37 மருத்துவர்களில் 32 பேருக்கு லேசான அறிகுறிகளுடன் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதால் அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மற்ற 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தடுப்பூசி போட்டவர்களுக்கும் தொற்று
சர் கங்கா ராம் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மருத்துவர்களுக்கும் தொற்று ஏற்பட்ட காரணமாகியுள்ளது. இந்த மருத்துவமனையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் இளைஞர்கள் ஆவர். அவர்களில் பெரும்பாலோர் தடுப்பூசி செலுத்தி இருந்தனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications