அடுத்தடுத்து 4 நிலநடுக்கம்.. எதோ இடிக்குதே? ரகசிய அணு ஆயுத சோதனை செய்யும் பாகிஸ்தான்? சந்தேகம்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடந்த சில நாட்களில் மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் நிலநடுக்கங்கள் பல்வேறு விதமான சந்தேகங்களை, குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளன. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து இந்தியாவின் ராணுவ நடவடிக்கையை அடுத்து அங்கே நடக்கும் நிலநடுக்கங்கள் வெறும் நிலநடுக்கமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை பாகிஸ்தான் நாட்டில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. முன்னதாக கடந்த சனிக்கிழமை தொடர்ச்சியாக இரண்டு நிலநடுக்கங்களை சந்தித்தது - காலையில் 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், அதைத் தொடர்ந்து 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.
புவியியலாளர்கள் மற்றும் வானிலை நிபுணர்கள் நில அதிர்வு இமயமலைப் பகுதியில் ஏற்பட்டதாக குறிப்பிட்டனர். இங்கே நிலநடுக்கம் ஏற்படுவது பொதுவான நிகழ்வுதான். ஆனால் இந்த நேரத்தில் அங்கே நிலநடுக்கம் ஏற்படுவது அணு ஆயுத சோதனையாக இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

கிரானா மலைகளில் உள்ள பாகிஸ்தான் அணு ஆயுத சேமிப்பு வசதியின் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதாக ஏற்கனவே செய்திகள் வந்தன. இங்கே இருக்கும் சுரங்கப்பாதை தாக்கப்பட்டது. அதே நாளில்தான் அங்கே 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கே ஒன்று அணு ஆயுத வசதி ஏதாவது தகர்க்கப்பட்டு அதனால் அணு கசிவு ஏற்பட்டு இருக்கலாம். அங்கே ஒன்று அணு ஆயுத வசதி தகர்க்கப்பட்ட நிலையில் அங்கே இதனால் அதிர்வு ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதே சமயம் பாகிஸ்தான் அணு ஆயுத சோதனை செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 13 நாட்களில் 4 நிலநடுக்கங்கள் அங்கே ஏற்பட்டு உள்ளதுதான் சந்தேகத்திற்கு காரணம். ஏப்ரல் 30, மே 5, 10 & 12 ஆகிய தேதிகளில் பாகிஸ்தான் நிலநடுக்கம் காரணமாக பாதிக்கப்பட்டது. இது இயற்கையான நடுக்கங்களா? நிலத்தடி உள்ளே நடத்தப்படும் அணுசக்தி சோதனைகளா? வேறு ஏதாவது இராணுவ நடவடிக்கைகளின் அறிகுறிகளா? இந்தியா நடத்திய தாக்குதலின் தாக்கமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
சில ஆராய்ச்சியாளர்கள், இந்த நிலநடுக்கங்கள் பாகிஸ்தானின் ரகசிய அணுசக்தி சோதனையுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். வரலாற்று ரீதியாக இதற்கு உதாரணங்கள் இருக்கின்றன. பாகிஸ்தான் இதற்கு முன்பே நிலத்தடி அணுசக்தி சோதனைகளை நடத்திய வரலாறு உண்டு. குறிப்பாக 1998 இல் சாகாய் மலைகளில் இதேபோல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது பாகிஸ்தான் அணு ஆயுதங்களை சோதனை செய்தது உறுதி செய்யப்பட்டது.
மோடி எச்சரிக்கை
சமீபத்தில்தான் பிரதமர் மோடி பேசுகையில், அணு ஆயுத சோதனைகளை வைத்து இந்தியாவை மிரட்ட முடியாது என்று கூறினார். அதில், பாகிஸ்தானில் இந்திய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியபோது, பயங்கரவாத அமைப்புகளின் கட்டிடங்கள் மட்டுமல்ல, அவர்களின் தைரியமும் நடுங்கியது. பவல்பூர் மற்றும் முரிட்கே போன்ற பயங்கரவாத தளங்கள் உலகளாவிய பயங்கரவாதத்தின் பல்கலைக்கழகங்களாக இருந்தன. 9/11 மற்றும் இந்தியாவில் நடந்த பெரிய பயங்கரவாத தாக்குதல்கள் உட்பட உலகில் நடந்த அனைத்து பெரிய பயங்கரவாத தாக்குதல்களும் இந்த பயங்கரவாத தளங்களுடன் தொடர்புடையவை.
நாட்டின் ஒற்றுமையையும் சமூக நல்லிணக்கத்தையும் குலைக்கும் முயற்சியாக பஹல்காம் தாக்குதல் நடந்தது. நாட்டையே உலுக்கிய அந்த தாக்குதலில் அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டன. அந்த தாக்குதல் என்னை தனிப்பட்ட வகையில் உலுக்கியது. என்னை கவலையில் தள்ளியது. பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிக்கும் விதத்தை பார்க்கும் போது, ஒருநாள் அந்த நாட்டையே அது அழித்துவிடும்.
பாகிஸ்தான் இருக்க வேண்டும் என அவர்கள் நினைத்தால், பயங்கரவாத முகாம்களை அழிக்க வேண்டும்.
பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. பயங்கரவாதமும் வணிகமும் கூட ஒரே நேரத்தில் இருக்க முடியாது. 10ம் தேதி நம் ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநரை தொடர்புகொண்ட பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தை கோரியது. இனி ராணுவ சேட்டைகள், பயங்கரவாத செயல்கள் இருக்காது எனக் கூறியது. இந்தியா அதனை பரிசீலித்து தற்போதைக்கு நாம் தாக்குதலை நிறுத்தியுள்ளோம். ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய அரசு புதிய நிலைப்பாட்டை எடுத்துள்ளது, தீவிரவாதத்திற்கு எதிரான நமது போர் புதிய அத்தியாயத்தை அடைந்து உள்ளது. இதுதான் இனி "நியூ நார்மல்" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு இருந்தார்.












Click it and Unblock the Notifications