ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. 2 வீரர்கள் உயிரிழப்பு.. பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொலை!
காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் துப்பாகிச்சூடு நடந்தது. இதில் இரண்டு வீரர்கள் பலியாகினர். யங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் 2 குழுக்களாக பிரிந்து அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்க்குள்ள மோடெர்கம் என்ற் கிராமத்தில் உள்ள வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்ததை கண்டறிந்தனர். பாதுகாப்பு படையினரை பார்த்ததும் பயங்கரவாதிகள் துப்பாகிச்சூடு நடத்தினர். இதையடுத்து பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
இதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல ப்ரிசல் பகுதியில் நடைபெற்ற என்கவுண்டரிலும் பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்தார். பயங்கரவாதிகள் தரப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர். அப்பகுதியில் பயங்கரவாதிகள் மேலும் சிலர் பதுங்கியிருக்கலாம் என சந்தேகம் இருப்பதால் குறிப்பிட்ட இடத்தை சுற்றி வளைத்த போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன.ர்
தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருவதால் பயங்கரவாதிகளின் உடல் இன்னும் மீட்கப்படவில்லை. ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில் சமீப காலமாக பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் கூறுகின்றன. கடந்த மாதம் தோடா மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளையும் பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications