வெளிநாடுகளில் 403 இந்திய மாணவர்கள் பலி.. கனடாவில் தான் அதிகம்.. மத்திய அரசு வெளியிட்ட திடுக் தகவல்
டெல்லி: இந்தியாவில் இருந்து சென்று 34 நாடுகளில் மாணவர்கள் படித்து வரும் நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் வெளிநாடுகளில் 403 இந்திய மாணவர்கள் பலியாகினர் என்றும், இதில் கனடாவில் தான் அதிக மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து உயர் கல்விக்காக மாணவர்கள் பலரும் வெளிநாடு செல்கின்றனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இந்திய மாணவர்கள் பலரும் மேற்படிப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில்தான், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் வெளிநாடுகளில் கல்விக்காக சென்ற இந்திய மாணவர்களில் 408 பேர் உயிரிழந்ததாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. ராஜ்யசபாவில் மத்திய அமைசர் வி முரளிதரன் அறிக்கையை சமர்பித்தார். அதில் கூறப்பட்டு இருந்ததாவது:- கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் வெளிநாடுகளில் 403 இந்திய மாணவர்கள் பலியாகினர். இயற்கை காரணங்கள் விபத்து என பல்வேறு காரணங்கள் இந்த உயிரிழப்புக்கு காரணமாக உள்ளது.
கனடாவில் தான் அதிகம்: 34 நாடுகளில் மாணவர்கள் படித்து வரும் நிலையில், கனடாவில்தான் அதிக மாணவர்கள் பலியாகியுள்ளனர். அதாவது, கனடாவில் 91 இந்தியர்கள் கடந்த 5 ஆண்டுகளில் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்து (48), ரஷ்யா (40), அமெரிக்கா (36), ஆஸ்திரேலியா (35), உக்ரைன் (21), ஜெர்மனி (20), சைப்ரஸ் (14), இத்தாலி மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் 10 என மொத்தம் 403 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெளிநாடுகளில் உள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியா உறுதியாக உள்ளது. தனிப்பட்ட வழக்குகள் மற்றும் விரும்பத்தகாத சம்பவங்கள் ஆகிய பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதர்களும் உயர் அதிகாரிகளும் கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழங்களுக்கும் அடிக்கடி சென்று அங்கு பயிலும் இந்திய மாணவர்களுடன் உரையாடி வருகின்றனர்.
அதீத முன்னுரிமை அளிக்கும்: வெளிநாடுகளில் பயிலும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வற்கு இந்தியா அதீத முன்னுரிமை அளிக்கிறது. ஏதாவது விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்து சென்று உரிய முறையில் விசாரணை நடப்பதையும் குற்றத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவதும் உறுதி செய்யப்படுகிறது. மன உளைச்சலில் உள்ள மாணவர்களுக்கு தூதரக உதவிகள் மற்றும் அவசர மருத்துவ வசதி ஆகியவையும் அளிக்கப்பட்டு வருகிறது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications