ஆபரேஷன் சிந்தூர் & பாகிஸ்தான் தாக்குதலில் 5 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் - டிஜிஎம்ஓ தகவல்!
டெல்லி: "ஆபரேஷன் சிந்தூர் மற்றும் எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 5 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர் என முப்படை அதிகாரிகள் இன்று செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளனர்.
இன்று இரவு பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறினால் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என ஹாட்லைனில் பாகிஸ்தானுக்கு தகவல் அனுப்பியுள்ளோம் என சிந்தூர் ஆபரேஷன் தொடர்பாக முப்படைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பேட்டி அளித்தபோது தெரிவித்துள்ளனர்.

ராணுவ ஜெனரல் ராஜிவ் கய் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், "எங்களுடைய மோதல் தீவிரவாதிகளுடன் மட்டுமே. பாகிஸ்தான் ராணுவத்துடன் இல்லை. மே 8 ஆம் தேதி இரவு ஏராளமான டிரோன்கள் நமது நகரங்களை நோக்கி வந்தன. லாகூர் அருகே இருந்து இந்தியா மீது டிரோன் தாக்குதல் நடைபெற்றது.
நாங்கள் உரிய நடவடிக்கை எடுத்து டிரோன்களை அழித்து இலக்குகளை காப்பாற்றினோம். பதில் தாக்குதல்களை நம்மிடம் உள்ள ஆயுதங்கள் மூலம் சிறப்பாக சமாளித்தோம். மே 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடந்த தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்தோம்.
இலக்குகளை மிகமிக எச்சரிக்கையாக தேர்வு செய்து தாக்குதல் நடத்தியுள்ளோம். நவீன உத்திகள் மூலம் எதிரிகளை ஆராய்ந்து தேர்வு செய்தோம். பாகிஸ்தான் ராணுவத்தின் மீதோ, பொதுமக்கள் மீதோ தாக்காமல், இலக்குகளை தேர்வு செய்து தாக்குதலை நடத்தியுள்ளோம். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மீது தாக்குதல் நடத்தி இந்திய ராணுவம் கடுமையான எச்சரிக்கை விடுத்தது.
பாகிஸ்தானின் F16 விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த சர்கோதா விமான தளத்தை வெற்றிகரமாக தாக்கினோம். நூர்கான் விமான தளத்தையும் இந்திய ராணுவம் வெற்றிகரமாகத் தாக்கியது. பாகிஸ்தானின் சக்கரில் உள்ள ரேடார் மையத்தையும் வெற்றிகரமாக அழித்துள்ளோம். ஜகோபாபாத் விமான தளத்தையும் இந்திய ராணுவம் தாக்கியது.
இந்தியா நடத்திய தாக்குதலில் 35 பாகிஸ்தான் ராணுவத்தினர் மரணம் அடைந்தனர். பாகிஸ்தான் படை வீரர்கள் அதிகம் பேர் இறந்திருக்க வாய்ப்புள்ளது. பாகிஸ்தான் அவசரமாக தாக்குதல் நிறுத்தம் தொடர்பாக தொடர்பு கொண்டது.
மே 10ஆம் தேதி காலை என்னை (இந்திய டிஜிஎம்ஓ) பாகிஸ்தான் டிஜிஎம்ஓ தொடர்பு கொண்டார். நேற்று மாலை 3.35 மணிக்கு இருநாட்டு டிஜிஎம்ஓக்களும் பேசினோம். பாகிஸ்தான் இன்று மீண்டும் தாக்கினால் சும்மா விடமாட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications