டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உ.பி. மாநிலத்தில் நிறைவடைந்த 2ஆம் கட்ட தேர்தல்.. உத்தரகண்ட், கோவா வாக்குப்பதிவு முடிந்தது.!

Google Oneindia Tamil News

டெல்லி: உத்தரகண்ட், கோவா மாநிலங்களில் இன்று ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தல் நிறைவடைந்தது. அதேபோல் உபி-இல் இன்று நடைபெற்ற 2ஆம் கட்ட வாக்குப்பதிவும் நிறைவடைந்தது.

5 State Assembly Elections 2022 LIVE: 2nd Phase Polling in UP & First Phase in Goa, Uttarakhand News Updates

Newest First Oldest First
10:00 PM, 14 Feb

கோவா மாநிலத்தில் இன்று நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 78.94% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக சன்குலிம் தொகுதியில் 89.64% வாக்குகள் பதிவாகியுள்ளன. தெற்கு கோவாவில் 78% வாக்குகளும் வடக்கு கோவாவில் 79% வாக்குகள் பதிவாகியுள்ளன.
9:26 PM, 14 Feb

இன்று ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்த உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் 62.5% வாக்குகள் பதிவாகியுள்ளன
9:07 PM, 14 Feb

விவசாயச் சட்டங்களை ரத்து செய்த பிறகு, பஞ்சாபில் இன்று பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். இதனிடையே பிரதமரின் வருகை காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாகத் தனது ஹெலிகாப்டர் பறக்க இரண்டு முறை அனுமதி மறுக்கப்பட்டதாகப் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்தார்.
8:06 PM, 14 Feb
மணிப்பூர்

மணிப்பூரில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட 30 பேர் கொண்ட நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலைக் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
7:28 PM, 14 Feb
பஞ்சாப்

டெல்லியில் ஆம் ஆத்மியின் ஆட்சியைப் பாருங்கள். கொரோனா இரண்டாவது அலையின் போது காங்கிரஸ் தொண்டர்கள் தான் மக்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்கினார்கள். கோவிட் காலத்தில் டெல்லியில் ஆம் ஆத்மி அரசு முற்றிலும் தோல்வியடைந்தது - பஞ்சாபில் ராகுல் காந்தி தாக்கு
7:14 PM, 14 Feb
பஞ்சாப்

ஆம் ஆத்மி கட்சியால் பஞ்சாபைக் கவனித்துக் கொள்ள முடியாது. அதை எப்படி செய்ய வேண்டும் என்றும் அவர்களுக்கு தெரியாது. பஞ்சாப் மாநிலத்தைக் காங்கிரசால் மட்டுமே சரிவர ஆட்சி செய்ய முடியும் - ராகுல் காந்தி
7:01 PM, 14 Feb
பஞ்சாப்

பஞ்சாப் அமைதி மிக முக்கியமானது. இது பரிசோதனை செய்யும் நேரமில்லை. எனவே பொதுமக்கள் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும் - பஞ்சாப் பிரசாரத்தில் ராகுல் காந்தி
6:48 PM, 14 Feb
உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், ராம்பூர் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT இயந்திரங்களுக்குத் தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
6:36 PM, 14 Feb
உத்தரப்பிரதேசம்

உத்தரப் பிரதேசம் 2ம் கட்ட சட்டசபைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அம்ரோஹாவில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி வாக்களித்தார்
6:25 PM, 14 Feb
பஞ்சாப்

அமரிந்தர் சிங் ஆட்சியை டெல்லியில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால், அவரை முதல்வர் பதவியில் இருந்து காங்கிரஸ் நீக்கியது: பஞ்சாப் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி
6:14 PM, 14 Feb
பஞ்சாப்

2014 தேர்தல் சமயத்தில், யுவராஜ் (ராகுல் காந்தி) வருகிறார் என்ற ஒரே காரணத்திற்காக எனது ஹெலிகாப்டரை பதன்கோட்டில் நிறுத்தினார்கள் - பஞ்சாபில் பிரதமர் மோடி
6:06 PM, 14 Feb
கோவா

மாலை 5 மணி நிலவரப்படி கோவாவில் 75.29% வாக்குகளும், உத்தரகாண்டில் 59.37% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
6:06 PM, 14 Feb
உத்தரப்பிரதேசம்

உத்தரப் பிரதேசத்தில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவில் மாலை 5 மணி நிலவரப்படி 60.44% வாக்குகள் பதிவாகியுள்ளன
5:59 PM, 14 Feb

எந்தக் கட்சிக்கு வாக்களித்தாலும் VVPAT இயந்திரத்தில் பாஜகவுக்கு வாக்களித்ததாகவே சீட்டுகள் வருவதாக சாமாஜ்வாடி கட்சி குற்றச்சாட்டு. இருப்பினும், இது எவ்வித ஆதாரமும் இல்லாத ஒரு ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று கூடுதல் தலைமை நிர்வாக அதிகாரி பிரம்மதேவ் ராம் திவாரி விளக்கம் அளித்துள்ளார்.
5:58 PM, 14 Feb
கோவா

கோவா; 5 மணி வரை கோவாவில் 75.29 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளது
5:54 PM, 14 Feb
உத்தரகாண்ட்

உயிரிழந்த வீரர்கள் மூலம் அரசியல் ஆதாயம் பெற முயலும் பாஜக: காங். தலைவர் ஹரீஷ் ராவத் குற்றச்சாட்டு

காங்கிரஸ் உத்தரகண்ட் தலைவர் ஹரிஷ் ராவத்,"மோடியும் பாஜகவும் ராணுவத்தை அவமதிக்கிறார்கள். இது இந்தியாவின் ராணுவம், பாஜக ராணுவம் அல்லது மத்திய அரசு ராணுவம் அல்ல. வீரமரணம் அடைந்த வீரர்கள் மூலம் பாஜக அரசியல் ஆதாயம் தேட முயல்கிறது. இந்திய ராணுவம் என்பது யாருக்கும் சொந்தமானது இல்லை. அது நாட்டின் ராணுவம்” என்கிறார்
5:40 PM, 14 Feb
உத்தரகாண்ட்

உத்தரகண்ட் மாநிலத்தில் 100 வயது முதியவர் வாக்களித்தார்

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கப்கோட் சட்டமன்றத் தொகுதியில் 100 வயது மதிக்கத்தக்க நாராயண் சிங் கப்கோடி தேர்தலில் வாக்களித்தார். வாக்களிக்க வந்த அவரை தேர்தல் அதிகாரிகள் சால்வை அணிவித்துக் கவுரவித்தனர்.
5:15 PM, 14 Feb
உத்தரப்பிரதேசம்

உத்தர பிரதேசத்தில் இதுவரை 51.93% சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளது
4:44 PM, 14 Feb
உத்தரப்பிரதேசம்

உத்தர பிரதேசத்தில் முதியவர்கள் பலர் வரிசையில் நின்று வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினார்கள்
4:28 PM, 14 Feb
கோவா

கோவாவில் பல்வேறு பகுதிகளில் திருநங்கைகள் வாக்கு செலுத்தி தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்
4:18 PM, 14 Feb
கோவா

பிற்பகல் 3 மணி வரை கோவாவில் உள்ள சங்கலீம் தொகுதியில் அதிகபட்ச வாக்கு பதிவாகி உள்ளது. அங்கு 54 சதவிகித வாக்கு பதிவாகி உள்ளது. இது கோவா முதல்வர் பிரமோத் சாவத் போட்டியிடும் தொகுதியாகும்
4:16 PM, 14 Feb

பஞ்சாப் சட்டசபைத் தேர்தல்: ஜலந்தர் பொதுக்கூட்டத்தில் இன்னும் சற்று நேரத்தில் உரையாற்றவுள்ளார் பிரதமர் மோடி
4:04 PM, 14 Feb
கோவா

பிற்பகல் 3 மணி நிலவரப்படி கோவாவில் 60.18 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளது
3:49 PM, 14 Feb
உத்தரப்பிரதேசம்

உத்தர பிரதேசத்தில் பிற்பகல் 3 மணி வரை 51.93 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளது
3:39 PM, 14 Feb
உத்தரப்பிரதேசம்

உ.பி: 2 முறை ஆட்சியில் இருந்த பாஜக, காங்கிரஸை குறைசொல்லாமல் எதுவும் செய்ய முடியாதா? காங்கிரஸை யாராலும் அழிக்க முடியாது: மகா. காங். தலைவர் நானா படோல்
3:39 PM, 14 Feb
உத்தரப்பிரதேசம்

உ.பி: உ.பி. ஹமிர்புர் மாவட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தேர்தல் பிரசாரம்
3:36 PM, 14 Feb
பஞ்சாப்

பஞ்சாப்: பஞ்சாப் விவசாயிகள் குளிரில் பட்டினி கிடந்த போது தொழிலதிபர்களுக்கு கடுமையாக உழைத்து கொண்டிருந்தார் பிரதமர் மோடி- ராகுல் காந்தி
3:35 PM, 14 Feb
உத்தரப்பிரதேசம்

உ.பி: வளர்ச்சியை இலக்காக கொண்டும் மாஃபியாக்களை ஒழிப்பதிலும் பாஜக அரசு செயல்பட்டது- யோகி ஆதித்யநாத்
3:27 PM, 14 Feb
உத்தரப்பிரதேசம்

உ.பி: 2-ம் கட்ட தேர்தலில் பல இடங்களில் வாக்காளர்கள் பெயர்கள் விடுபட்டதாக குவியும் புகார்கள்
3:21 PM, 14 Feb
உத்தரப்பிரதேசம்

சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி செய்த போதுதான் பாக். ஊடுருவல் நிகழ்ந்தது- ராணுவ வீரர்களின் தலைகள் துண்டிக்கப்பட்டன- அமித்ஷா
READ MORE

English summary
2nd Phase in UP; Goa, Uttarakhand single phase vote will begin tomorrow. Here are the Live Page for Election Updates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X