பிரஸ் மீட்டா? நோ தர முடியாது.. செய்தியாளர்களை பார்த்து தெறித்து ஓடும் பாஜக தலைகள்!
Recommended Video

டெல்லி: 5 மாநில சட்டமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து பாஜக தலைவர்கள் செய்தியாளர்களை சந்திக்க மறுப்பு தெரிவித்து வருகிறார்கள்.
ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றது. பாஜக கொஞ்சமும் எதிர்பார்க்காத வகையில் பெரிய தோல்வியை இந்த தேர்தலில் சந்தித்துள்ளது.
இந்த தேர்தல் தோல்வி காரணமாக பாஜகவினர் பெரிய அதிர்ச்சியில் உள்ளனர். இதனால் அவர்கள் செய்தியாளர்களை சந்திக்க மறுப்பு தெரிவித்து வருகிறார்கள்.

ரத்து செய்யப்பட்டுள்ளது
இந்த மோசமான தோல்வி காரணமாக பாஜக ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர்கள் சந்திப்பு பல ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. மத்திய பிரதேசத்தில் பாஜக தலைவர்கள் தேர்தல் முடிவிற்கு பின் இன்று மதியம் செய்தியாளர்களை சந்திப்பதாக இருந்தது. ஆனால் அந்த சந்திப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சந்திக்காமல் சென்ற ராஜ்நாத்
அதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், செய்தியாளர்களை சந்திக்காமல் சென்று உள்ளார். நாடாளுமன்றத்தில் இருந்து அவர் வெளியே வரும் சமயத்தில் செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி கேட்க முயன்றனர். ஆனால் ராஜ்நாத் சிங் அவர்களை சந்திக்காமல் சென்றுவிட்டார்.

மோடி சந்திக்கவில்லை
அதேபோல் பிரதமர் மோடியும் இன்று செய்தியாளர்களை சந்திக்கவில்லை. இன்று காலை நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடருக்கு முன் செய்தியாளர்களை சந்தித்தார். ஆனால் அதில் தேர்தல் முடிவுகள் குறித்த கேள்விகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தேர்தல் குறித்து இதில் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

தமிழிசை பேட்டி
இந்த நிலையில் தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஒரே நபர் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மட்டும்தான். ஆனாலும் அவர் ''இது வெற்றிகரமான தோல்வி'' என்று பாஜகவினரையே குழப்பும் வகையில் எதையோ பேசி செய்தியாளர்களை சமாளித்து இருக்கிறார். இவரின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications