5 மாநில தேர்தல்.. 2 மாநிலங்களில் காங். வெற்றி.. ம.பியில் இழுபறி.. டிஆர்எஸ் அபாரம்!
Recommended Video

டெல்லி: 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. காங்கிரஸ் அபார வெற்றியை நோக்கி சென்று கொண்டுள்ளது.
தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டசபைகளுக்கும், நவம்பர் மற்றும் டிசம்பரில் தேர்தல்கள் நடைபெற்றன.

மத்திய பிரதேசம், மிசோராமில் நவம்பர் 28ம் தேதி, தெலுங்கானா மற்றும் ராஜஸ்தானில் டிசம்பர் 7ம் தேதிகளிலும், சட்டீஸ்கரில் இரு கட்டங்களாக நவம்பர் 12 மற்றும் நவம்பர் 20ம் தேதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை வரையிலான நிலவரப்படி,
தெலுங்கானா: 87 தொகுதிகளில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி முன்னிலை, 21 தொகுதிகளில் காங்கிரஸ்-தெலுங்கு தேசம் கூட்டணி முன்னிலை, மற்ற கட்சிகள் 11 தொகுதிகளில் முன்னிலை
மத்திய பிரதேசம்: காங்கிரஸ் 110 தொகுதியில் முன்னிலை, 110 தொகுதிகளில் பாஜக முன்னிலை, 10 தொகுதிகளில் மற்ற கட்சிகள் முன்னிலை
ராஜஸ்தான்: 101 தொகுதிகளில் காங்கிரஸ், 72 தொகுதிகளில் பாஜக முன்னிலை, 26 தொகுதிகளில் மற்ற கட்சிகள் முன்னிலை
சட்டீஸ்கர்: காங்கிரஸ் கட்சி 65 தொகுதிகளில் முன்னிலை, பாஜக 17 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது, 8 தொகுதிகளில் மற்ற கட்சிகள் முன்னிலை வகிக்கிறது.
மிசோரம்: இதில் மிசோராமில் மட்டும் தற்போது முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளது. மிசோராமில் ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்து இருக்கிறது. மிசோ தேசிய கூட்டணி 26 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 1 தொகுதியில் வென்றுள்ளது. மற்றவை 8 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.
குறிப்பு: இன்னும் 4 மாநில தேர்தல் முடிவுகள் தேர்தல் ஆணையத்தால் முழுமையாக அறிவிக்கப்படாததால், முன்னிலை நிலவரங்களில் சில மாறுபாடுகள் இருக்க வாய்ப்புள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications