லிமிட் இல்லை.. 50% க்கும் அதிகமாக இடஒதுக்கீடு வழங்கலாம்! நீதிபதி வழங்கிய மிக முக்கிய தீர்ப்பு
டெல்லி: தேசிய அளவில் நிலவி வந்த 50 சதவிகித இடஒதுக்கீடு கட்டுப்பாட்டிற்கு எதிராக உச்ச நீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஷ்வரி தீர்ப்பு வழங்கி உள்ளார்.
உயர் சாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்ற அமர்வில் 3 நீதிபதிகள் இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாகவும், ஒரு நீதிபதி இடஒதுக்கீட்டிற்கு எதிராகவும் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.
இந்த இடஒதுக்கீட்டை கொண்டு வந்தால், தேசிய அளவிலான 50 சதவிகித இடஒதுக்கீடு என்ற லிமிட்டை தாண்ட வேண்டி இருக்கும். நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா எம். திரிவேதி மற்றும் ஜே.பி.பர்திவாலா ஆகியோர் இந்த இடஒதுக்கீட்டை ஆதரித்து தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

முக்கிய வாதம்
தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி பாட் ஆகியோர் இதை எதிர்த்து உள்ளனர். இதனால் 3:2 என்ற அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை அடிப்படையில் இடஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் இடஒதுக்கீட்டை கொண்டு வந்தால், தேசிய அளவிலான 50 சதவிகித இடஒதுக்கீடு என்ற லிமிட்டை தாண்ட வேண்டி இருக்கும் என்ற வாதம் வைக்கப்பட்டு வந்தது. 50 சதவிகித இடஒதுக்கீடு கட்டுப்பாடு தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டு வந்தது.

நீதிபதி தினேஷ் மகேஷ்வரி
இந்த நிலையில் அது தொடர்பாக நீதிபதி தினேஷ் மகேஷ்வரி முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கி உள்ளார். இதுவரை தேசிய அளவில் நிலவி வந்த 50 சதவிகித இடஒதுக்கீடு கட்டுப்பாட்டிற்கு எதிராக அவர் தீர்ப்பு வழங்கி உள்ளார். தேசிய அளவில் மாநில அரசு மத்திய அரசு சேர்த்து மொத்தம் 50 சதவிகிதம் மட்டுமே அதிகபட்சமாக இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அதற்கு மேல் இடஒதுக்கீடு வழங்க கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமே இதற்கு விதி விலக்கு உள்ளது.

விதி விலக்கு
சிறப்பு அதிகாரம் மூலம் தமிழ்நாடு மட்டும் 69 சதவிகிதம் இடஒதுக்கீடு கொண்டு உள்ளது. இந்த நிலையில்தான் 50 சதவிகித இடஒதுக்கீடு கட்டுப்பாடு தொடர்பாக நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தீர்ப்பு வழங்கி உள்ளார். அவர் தனது தீர்ப்பில், நாம் மொத்தம் 3 விஷயங்களை நாம் இதில் ஆராய வேண்டும். இந்த இடஒதுக்கீடு ஜாதி ரீதியிலான இடஒதுக்கீட்டிற்கு எதிராக உள்ளதா என்று பார்க்க வேண்டும். சமத்துவத்திற்கு எதிராக இது இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

3 விஷயங்கள் ஆராய்ந்தார்
50 சதவிகிதம் இடஒதுக்கீடு இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை இந்த 10 சதவிகித இடஒதுக்கீடு மீறுகிறதா என்று பார்க்க வேண்டும். இதை வைத்து பார்க்கையில் பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு செல்லும் என்று நீதிபதி தினேஷ் மகேஷ்வரி தனி தீர்ப்பு வழங்கி உள்ளார். பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு அரசியலமைப்பு விதிகளை மீறவில்லை. 50 சதவிகிதம் இடஒதுக்கீடு இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மீறுவது தவறில்லை.

கட்டுப்பாடு
இந்த கட்டுப்பாடு என்பது கட்டாயமான கட்டுப்பாடு கிடையாது. அவசியமாக இதை பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. 50 சதவிகிதம் இடஒதுக்கீடு கட்டுப்பாடு என்பது கட்டாயம் அல்ல. அரசியலமைப்பு ரீதியாக இதை மீறவே கூடாது என்ற விதி எதுவும் இல்லை என்று நீதிபதி தினேஷ் மகேஷ்வரி கூறியுள்ளார். இது ஒரு தனி நீதிபதி கருத்து மட்டுமே. இருந்தாலும் இந்த கருத்து உச்ச நீதிமன்ற கருத்தாகவே பார்க்கப்படும்.

மாநில அரசுகள்
இதை பல்வேறு மாநில அரசுகள் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. இடஒதுக்கீட்டை கூடுதலாக வழங்க, 50 சதவிகிதத்திற்கும் மேல் வழங்க மாநில அரசுகள் இதை பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் 69 சதவிகித இடஒதுக்கீட்டு இருப்பது போல மற்ற மாநிலங்கள் கூடுதல் இடஒதுக்கீடுகளை கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சரியாக சொல்ல வேண்டும் என்றால் இந்த தீர்ப்பு தேசிய அளவில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான புதிய வாய்ப்புகளை திறந்துவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications