வங்கிகளுக்கு திரும்ப வந்த 2 ஆயிரம் நோட்டுக்கள் எவ்வளவு? ரிசர்வ் வங்கி கவர்னர் அளித்த பதில்
டெல்லி: புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த மே 23 ஆம் தேதி அறிவித்தது. இந்த நிலையில், நாடு முழுவதும் இதுவரை திரும்ப பெறப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் தாள்கள் எவ்வளவு என்ற விவரத்தை ரிசர்வ் வங்கி கவர்னர் வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் 1,000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. மக்கள் தங்கள் கைகளில் இருந்த செல்லாத நோட்டுக்களை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்பிறகு புதிய ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. துவக்கத்தில் மக்கள் மத்தியில் அதிகம் புழக்கத்தில் இருந்த ரூ.2 ஆயிரம் ரூபாய் தாள்கள் கடந்த சில ஆண்டுகளாக புழக்கத்தில் கணிசமாக குறைந்தது. குறிப்பாக கடந்த 2020-ம் ஆண்டில் இருந்தே ஏடிஎம்களில் இருந்து ரூ.2,000 நோட்டுகள் வழங்குவது நிறுத்தப்பட்டு விட்டது.
அதேபோல், 2,000 ரூபாய் நோட்டு அச்சிடுவதே 2018-19-ம் ஆண்டு நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால், மக்கள் மத்தியில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை பார்ப்பதே அரிதாகிவிட்டது. ஏதோ ஒன்றிரண்டு தாள்களை எப்போதாவது அரிதாக காண முடிந்ததே தவிர பெரும்பாலான தாள்கள் எங்கே சென்றது கூட என்று தெரியவில்லை.
கடந்த மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி நாட்டில் சுமார் 3.62 லட்சம் கோடி மதிப்பிலான இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருந்தன. இது புழக்கத்தில் உள்ள மொத்த நோட்டுகளில் 10.8 சதவீதம்தான் என்பதும் கவனிக்கத்தக்கது. இந்த நிலையில் தான் நாட்டில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.

அதன்படி, மே 23 ஆம் தேதி முதல் வங்கியில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படுகின்றன. இதற்காக எந்த அடையாள சான்றும் ஆவணமும் கேட்கப்படுவதில்ல்லை. இந்த நிலையில், நாட்டில் இதுவரை புழக்கத்தில் இருந்த 50 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் திரும்ப வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரிசர்வ் வங்கி கவர்னர், இது தொடர்பாக கூறியதாவது:-
"நாட்டில் மார்ச் மாத நிலவரப்படி புழக்கத்தில் 3.62 லட்சம் கோடி 2 ஆயிரம் ரூபாய் தாள்கள் இருந்தன. இன்றைய நிலவரப்படி இதில் 1.80 லட்சம் கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் தாள்கள் வங்கிகளுக்கு வந்துள்ளன. அதாவது 50 சதவிகித தாள்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன. இதில் 80 சதவீத தாள்கள் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது" என்று கூறினார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications