பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ1 லட்சம், ரூ25 லட்சம் இன்சூரன்ஸ்- நீட் விலக்கு -காங்கிரஸ் 50 வாக்குறுதிகள்!
டெல்லி: பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ1 லட்சம் உரிமைத் தொகை வழங்கப்படும்; நீட் தேர்வு கட்டாயம் என்பது மாற்றி அமைக்கப்படும். ரூ25 லட்சம் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்தப்படும் என்பது உள்ளிட்டவை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்.
லோக்சபா தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள 50 முக்கிய அம்சங்கள்:

1. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ1 லட்சம் உரிமைத் தொகை.
2. ஏழைகளுக்கான மருத்துவக் காப்பீடு ரூ.25 லட்சமாக உயர்வு
3. பழகுநர் பயிற்சி (அப்ரன்டிஸ்) இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம்
4. டிப்ளமோ இளைஞர்களுக்கு பொதுத் துறையில் தொழில் பழகுநர் பயிற்சி (அப்ரன்டிஸ்)
5. ஜம்மு-காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து
6. விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டம்
7. மார்ச் 2024 வரையிலான அனைத்து கல்விக் கடன்களும் தள்ளுபடி
8. வேளாண் இடு பொருட்களின் மீது ஜிஎஸ்டி வரி கிடையாது
9. LGBT சமூகத்தினரின் திருமணத்தை அங்கீகரிக்கும் வகையில் சட்டம்
10. அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த பணி முறை நீக்கம்

11. தனிநபர் வருமான வரி ஒரே விதமாக நிலையானதாக இருக்க சட்டம்
12. ரயில்களில் முதியோர்களுக்கான கட்டண சலுகை மீண்டும் வழங்கப்படும்
13. சிறுபான்மை மாணவர்களுக்கு மீண்டும் கல்வி உதவித் தொகை
14. ராணுவ வீரர்களை தேர்வு செய்யும் அக்னிபாத் முறை ரத்து
15. அனைத்து ஊடகங்களுக்கும் ஊடக சுதந்திரம்.
16. மீன்பிடி விசைப்படகுகளுக்கான டீசல் மானியம் மீண்டும் வழங்கப்படும்
17. தேசிய கல்விக் கொள்கையில் மாநில அரசுகளுடன் ஆலோசித்து திருத்தம்
18. நாடாளுமன்றத்தில் பாஜக அரசு விவாதமின்றி நிறைவேற்றிய சட்டங்கள் மறு ஆய்வு
19. மாவட்டம் தோறும் அம்பேத்கர் நூலகங்கள்
20. 21 வயதுக்கு கீழே உள்ள விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ10,000

21. சமூக, பொருளாதார, ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு
22. இடஒதுக்கீடு உச்ச வரம்பு 50% உயர்த்தப்படும்
23. அனைத்து ஜாதி ஏழைகளுக்கும் 10% இட ஒதுக்கீடு
24. ST, ST, OBC காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும்
25. ST, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரு மடங்காக உயர்வு
26. கட்சி தாவினால் எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகள் பறிபோக சட்டத் திருத்தம்
27. LGBTQIA சங்கங்களுக்கு சட்ட அங்கீகாரம்
28. பி எம் கேர்ஸ் ஊழல் குறித்து விசாரணை
29. காலியாக உள்ள 30 லட்சம் மத்திய அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்
30. அங்கன்வாடிகளில் கூடுதலாக 14 லட்சம் வேலை வாய்ப்புகள்
31. மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் நடைமுறை ஒழிப்பு
32. மத்திய அரசு பணிகளில் 50 சதவீதம் வரை பெண்களுக்கு இடஒதுக்கீடு
33. மீனவர் சமுதாயத்துக்கு தனி வங்கி
34. சிறுபான்மையினரின் உடை, உணவு, மொழி, தனிச் சட்டங்களைத் தேர்வு செய்யும் சுதந்திரம் உறுதி செய்வோம்
35. பாஜகவின் ஜிஎஸ்டி முறை நீக்கப்பட்டு ஜி.எஸ்.டி 2.0 கொண்டுவரப்படும்

36. மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத் குறைகள் களையப்படும்
37. அண்டை நாடுகளால் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதைத் தடுக்க நடவடிக்கை
38. மாற்றுத் திறனாளிகள், முதியோர் பென்ஷன் ரூ.1000 உயர்வு
39. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்
40. ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்
41. 100 நாள் வேலைத்திட்டத்தின் ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தப்படும்
42. அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனை, மருத்துவக்கல்லூரிகள்
43. ஒரே நாடு ஒரே தேர்தல் முறை ரத்து
44. அரசு பணி தேர்வுகளுக்கான விண்ணப்பக் கட்டணம் ரத்து
45. பணமதிப்பிழப்பு, ரபேல் ஒப்பந்தம், பெகாசஸ் உளவு, தேர்தல் பத்திர திட்ட ஊழல் குறித்து விசாரணை
46. பாஜகவில் சேர்ந்து இருந்து வழக்கில் தப்பித்தவர்கள் மீது மீண்டும் விசாரணை
47. பொதுப்பட்டில் துறைகளை மாநில பட்டியலுக்கு மாற்றுவது குறித்து ஆய்வு
48. செஸ் வரி வசூலில் மாநிலங்களை ஏமாற்றும் பாஜக சட்டத்துக்கு முற்றுப்புள்ளி
49. தலித் மாணவர்கள் மீதான துன்புறுத்தல்களைத் தடுக்க ரோஹித் வெமுலா சட்டம்
50. நீட், CUET தேர்வுகள் கட்டாயம் கிடையாது- மாநில அரசுகளின் கல்வி நிறுவனங்களில் மாநில அரசுகள் விருப்பத்திற்கு ஏற்ற முறையில் மாணவர் சேர்க்கையை கடைபிடிக்கலாம்












Click it and Unblock the Notifications