52 வயதாகிறது இன்னும் சொந்தமாக வீடு கிடையாது.. 1977ல் அம்மா சொன்னதை கேட்டு..மனம் திறந்த ராகுல் காந்தி
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, கடந்த 1977 ஆம் ஆண்டு தங்கள் குடும்பத்தினர் அரசு இல்லத்தை காலி செய்ய தயாராகி வந்த நிகழ்வு குறித்து தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
டெல்லி: காங்கிரஸ் மாநாட்டின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். அப்போது பாரத் ஜோடோ யாத்திரை முதல் பல்வேறு விஷயங்கள் குறித்து ராகுல் காந்தி பேசினார். குறிப்பாக 1977 ஆம் ஆண்டு தங்கள் குடும்பத்தினர் அரசு இல்லத்தை காலி செய்ய தயாராகி வந்த நிகழ்வும் குறித்தும் தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு, சத்தீஷ்கார் மாநிலம், நவராய்ப்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இந்த மாநாட்டின் முதல் நாளில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் கலந்து கொள்ளவில்லை. மாநாட்டின் இரண்டாவது நாளில் சோனியா காந்தி பங்கேற்று பேசினார்.

மனம் திறந்த ராகுல் காந்தி
காங்கிரஸ் மாநாட்டின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். அப்போது பாரத் ஜோடோ யாத்திரை முதல் பல்வேறு விஷயங்கள் குறித்து ராகுல் காந்தி பேசினார். குறிப்பாக 1977 ஆம் ஆண்டு தங்கள் குடும்பத்தினர் அரசு இல்லத்தை காலி செய்ய தயாராகி வந்த நிகழ்வும் குறித்தும் தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். இது தொடர்பாக ராகுல் காந்தி கூறியதாவது:-

அரசு வீடு என்று அம்மா கூறினார்
எங்கள் வீட்டில் அப்போது ஒரு வித்தியாசமான சூழல் நிலவியது. நான் எனது அம்மாவிடம்(சோனியா காந்தி) சென்று என்ன நடந்தது என்று கேட்டேன். வீட்டில் இருந்து வெளியேற போகிறோம் என்று அம்மா கூறினார். அப்போது வரை நாங்கள் இருந்த வீடு எங்களின் சொந்த வீடு என்றே நான் நினைத்துக் கொண்டு இருந்தேன். எனவே, எனது அம்மாவிடம் ஏன் வீட்டை காலி செய்கிறோம் என்று கேட்டேன். அப்போதுதான் முதல் முறையாக இது நமக்கு சொந்தமான வீடு கிடையாது. அரசு வீடு என்று அம்மா கூறினார்.

52 ஆண்டுகள் ஆகியும் எனக்கு
மேலும் வீட்டில் இருந்து வெளியேறியாக வேண்டும் என்றார். நான் உடனே அடுத்து எங்கே போகப்போகிறோம் என்று கேட்டேன். தெரியவில்லை என்று அம்மா கூறினார். நான் சற்று திடுக்கிட்டேன்.. 52 ஆண்டுகள் ஆகியும் எனக்கு இன்னமும் சொந்தமாக வீடு கிடையாது. எங்களின் குடும்ப வீடு அலகாபாத்தில் உள்ளது. அதுவும் கூட எங்களுக்கு சொந்தமானது இல்லை. 12, துக்ளக் லேன் வீட்டில் வசித்து வருகிறோம். ஆனால், அதுவும் என்னுடைய வீடு கிடையாது"என்றார்.

இந்த வீடு என்னுடன் தான் நகரும்
தொடர்ந்து தனது பாரத் ஜோடோ யாத்திரை குறித்து பேசிய ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் இருந்து எனது நடைபயணத்தை நான் துவங்கிய போது, எனது பொறுப்பு என்ன என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். அப்போது ஒரு ஐடியா வந்தது. என்னை சுற்றியுள்ள இந்த 20 முதல் 25 அடிதான் அடுத்த 4 மாதங்களுக்கு எனது வீடாக இருக்கப்போகிறது என்று எனது மக்களிடம் நான் கூறினேன். இந்த வீடு என்னுடன் தான் நகரும்.

வீட்டிற்கு வந்துவிட்டதாக உணர்ந்தேன்
யாத்திரை தான் எங்கள் இல்லம். அதன் கதவு, ஏழை, பணக்காரன், விலங்குகள் என அனைவருக்காகவும் திறந்திருக்கும். இதை விட்டு செல்லும் போது வீட்டை விட்டு செல்வது போல ஒரு உணர்வு இருக்க வேண்டும். நான் இதை செய்த நாளில் யாத்திரை மாறியது. எங்கள் யாத்திரை காஷ்மீரை சென்று சேர்ந்த போது எனது வீட்டிற்கு வந்துவிட்டதாக உணர்ந்தேன்" என்றார்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications