இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடும் காலநிலை மாற்றம்! 5.48 கோடி குழந்தைகள் பாதிப்பு! ஷாக்
டெல்லி: உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. இந்நிலையில், இந்தியாவில் காலநிலை மாற்றம் காரணமாக சுமார் 5.48 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக யுனிசெஃப் தெரிவித்திருக்கிறது.
யுனிசெஃப் என்பது, உலகெங்கிலும் உள்ள குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக செயல்படும் ஒரு ஐக்கிய நாடுகளின் நிறுவனமாகும். காலநிலை மாற்றம் காரணமாக உலகம் முழுவதும் குழந்தைகள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறித்த அறிவிப்பை தற்போது யுனிசெஃப் வெளியிட்டிருக்கிறது.

அதில், "இந்தியாவில் உள்ள குழந்தைகள் வெப்ப அலை மற்றும் காற்று மாசுபாடு போன்ற சுற்றுச்சூழல் அழுத்தங்களால் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்கின்றனர். இது அவர்களின் உடல்நலம், பள்ளி வருகை மற்றும் ஒட்டுமொத்த கற்றலை மோசமாக பாதிக்கிறது.
2024ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் சுமார் 5.48 கோடி குழந்தைகள் வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தீவிர வானிலை நிகழ்வுகள், வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் சூறாவளி போன்ற பிற இயற்கை பேரழிவுகளுடன் இணைந்து, குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல், நாடு முழுவதும் பள்ளிகளுக்கு பரவலான அழிவையும் ஏற்படுத்தியுள்ளன.
காலநிலை ஆபத்து குறியீட்டில் 163 நாடுகளில் இந்தியா 26வது இடத்தில் உள்ளது. எனவே காலநிலை மாற்றக் கல்வியை தேசிய பாடத்திட்டத்தில் ஒருங்கிணைப்பதற்காக இந்திய அரசாங்கத்துடன் நெருக்கமாகப் நாங்கள் (யுனிசெஃப்) பணியாற்றி வருகிறோம். இந்த முயற்சி விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், காலநிலை தொடர்பான சவால்களைச் சமாளிக்க மாணவர்களைத் தயார்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலக அளவில், 2024 ஆம் ஆண்டில் வெப்ப அலைகள் மிகவும் குறிப்பிடத்தக்க காலநிலை ஆபத்தாக அடையாளம் காணப்பட்டிருக்கிறது. இது உலகளவில் 17.1 கோடி மாணவர்களைப் பாதித்திருக்கிறது" என்று யுனிசெஃப் தெரிவித்திருக்கிறது.
காலநிலை மாற்றம் என்றால் என்ன?
புவி வெப்பமயமாதல் காரணமாக காலநிலை மாற்றம் ஏற்படுகிறது. பூமியிலிருந்து எடுக்கப்படும் பெட்ரோல், டீசல் போன்ற புதைப்படிவ எரிபொருட்களை எரிப்பதன் மூலம் கரியமில வாயு உருவாகிறது. இந்த வாயு பூமியிலிருந்து எளிதில் வெளியேறுவது கிடையாது. அதற்கு பதில் பூமியின் வளிமண்டலத்தை சுற்றி வந்துக்கொண்டிருக்கிறது. இதனால் சூரியனின் வெப்பம் பூமியிலிருந்து வெளியேற முடியாமல் இருக்கிறது. இப்படி இருப்பதால் பூமியின் வெப்பம் அதிகரிக்கிறது.
அதிக வெப்பம், துருவ பகுதிகளில் உள்ள பனிப்பாறைகளை உருக்குவதால் காலநிலையில் மாற்றம் ஏற்படுகிறது. அதாவது, எதிர்பாராத வெள்ளம், புயல், மழை, சூறாவளி, முன்கூட்டியே கணிக்க முடியாத வானிலை ஆகியவை இந்த காலநிலை மாற்றத்தால் ஏற்படுபவைதான். இந்தியாவும் தற்போது காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் இணைந்திருப்பது புதிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளம் அனைவரும் அறிந்ததுதான். இந்த வெள்ள பாதிப்புகள் ஏராளமான உயிர்களை பறித்தது. மட்டுமல்லாது, மிகப்பெரிய அளவில் பொருளாதார பாதிப்புகளையும் ஏற்படுத்தியது. அதேபோல இந்தியாவில் நடந்தால், இந்தியா கடுமையாக பாதிக்கப்படும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications