2 துண்டான காது.. ஆக்ரோஷமாக 6 வயது சிறுவனை தாக்கிய பிட்புல் நாய்.. துடிதுடித்த சிறுவன்
டெல்லி: வீட்டுக்கு வெளியே விழுந்த பந்தை எடுக்க சென்ற 6 வயது சிறுவனை பக்கத்து வீட்டில் வளர்க்கப்படும் பிட்புல் நாய் விரட்டி விரட்டி கடித்தது. மொத்தம் 10 இடங்களில் பிட்புல் நாய் கடித்த நிலையில் சிறுவனின் காது கிழிந்து துண்டானது. தற்போது அந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். பிட்புல் நாயின் உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லி பிரேம் நகரில் வசித்து வருபவர் ராஜேஷ் பால். இவர் பிட்புல் நாய் வளர்த்து வருகிறார். இவரது வீட்டு அருகே 6 வயது சிறுவன் வசித்து வருகிறான். நேற்று முன்தினம் சிறுவன் தனது வீட்டு வளாகத்தில் தனது தாத்தாவுடன் பந்தை வைத்து விளையாடி வந்தான்.

அப்போது திடீரென்று அந்த பந்து வீட்டுக்கு வெளியே வந்து விழுந்தது. இதையடுத்து பந்தை எடுக்க சிறுவன் வீட்டுக்கு வெளியே வந்தான். அப்போது பக்கத்து வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் பிட்புல் நாய் வெளியே ஓடிவந்தது.
சிறுவன் மது பாய்ந்த பிட்புல் நாய் கடித்தது. பயந்துபோன சிறுவன் பிட்புல் நாயிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்து ஓடினான். ஆனால் பிட்புல் நாய் விடவில்லை. சிறுவனை விரட்டி விரட்டி கடித்தது. இதையடுத்து அங்கிருந்த ஒரு பெண் உள்பட 2 பேர் சிறுவனை பிட்புல் நாயிடம் இருந்து மீட்டனர். அதன்பிறகு சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த பிட்புல் நாய் தாக்குதலின் சிறுவனின் காது கிழிந்தது. காதின் ஒருபகுதி துண்டாகிப்போனது. உடலில் மொத்தம் 10 இடங்களில் நாய் கடித்துள்ளது. குறிப்பாக தலையின் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி சிறுவனின் தாத்தா கூறுகையில், ‛‛நாய் கடித்ததில் எனது பேரனின் பற்கள் உடைந்துள்ளன. முகம் மோசமாக காயமடைந்துள்ளது. காது கழிந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக அவன் சுயநினைவுடன் இருக்கிறான். பேச முடிகிறது. இந்த நாய் இதற்கு முன்பு 4 குழந்தைகளை தாக்கியது. இதுதொடர்பாக போலீசில் புகார் செய்துள்ளோம். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது எனது பேரனை தாக்கி உள்ளது.'' என்று கூறி வருந்தினார்.
இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 291 (விலங்குகள் விஷயத்தில் அலட்சியமாக நடந்துகொள்வது), 125(b) (மற்றவர்களின் உயிருக்கும், பாதுகாப்பிற்கும் ஆபத்தை விளைவிக்கும் செயலில் ஈடுபடுதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிட்புல் நாய் உரிமையாளர் ராஜேஷ் பாலை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பிட்புல் நாயை காப்பகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. சிறுவனை பிட்புல் நாய் தாக்குவது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. அந்த வீடியோ தற்போது வெளியாகி அனைவரையும் அதிர வைத்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications