2024-ல் எல். முருகன், மன்மோகன் சிங் உட்பட 68 ராஜ்யசபா எம்.பிக்கள் பதவி காலம் முடிவடைகிறது!
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட 68 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவி காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது.
நாடாளுமன்ற ராஜ்யசபாவில் மொத்தம் 250 எம்.பிக்கள்.. இவர்களில் 238 பேர் மாநில சட்டசபைகளில் எம்.எல்.ஏக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். எஞ்சிய 12 பேர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவர். தற்போது ராஜ்யசபாவில் 245 எம்பிக்கள் உள்ளனர். இவர்களில் 233 பேர் எம்.எல்.ஏக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ராஜ்யசபா எம்பிக்களின் பதவி காலம் 6 ஆண்டுகள்.

பாஜக கூட்டணி: ராஜ்யசபாவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மொத்தம் 109 எம்.பிக்கள் உள்ளனர். ஆளும் பாஜகவுக்கு மட்டும் 93 எம்.பிக்கள். பாஜகவின் 11 கூட்டணி கட்சிகள் தலா 1 எம்.பியை ராஜ்யசபாவில் பெற்றிருக்கின்றன. 5 நியமன உறுப்பினர்களும் ஆளும் அரசு தரப்பு கணக்கில் சேர்க்கப்படுகின்றனர்.
எதிர்க்கட்சிகள்: ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் எம்.பிக்கள் எண்ணிக்கை மொத்தம் 129. இதில் காங்கிரஸ் 30, திரிணாமுல் காங்கிரஸ் 13, ஆம் ஆத்மி 10, திமுக 10, ஆர்ஜேடி 6, சிபிஎம் 5, ஜேடியூ 5, சமாஜ்வாதி 3, தேசியவாத காங்கிரஸ் 3, சிவசேனா உத்தவ் தாக்கரே 3, சிபிஐ 2, ராஷ்டிரிய லோக் தள் 1, முஸ்லிம் லீக் 1, மதிமுக 1 அடங்கும்.
பாஜக ஆதரவு கட்சிகள்: ராஜ்யசபாவில் எந்த கூட்டணியிலும் இல்லாமல் பிஜூ ஜனதா தளம் 9, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 9, பிஆர்எஸ் 7, அதிமுக 4, பகுஜன் சமாஜ் 1, தெலுங்கு தேசம் 1 எம்பிக்கள் உள்ளனர். இந்த எந்த கூட்டணியிலும் சேராத எம்பிக்கள் பெரும்பாலும் மத்திய அரசின் மசோதாக்களை ஆதரிப்பதால் ராஜ்யசபாவில் மத்திய அரசின் சட்டங்கள் சிக்கலின்றி நிறைவேறி விடுகின்றன.
தொடங்கியது ராஜ்யசபா தேர்தல்: இந்த ஆண்டு மட்டும் ராஜ்யசபாவில் மொத்தம் 68 எம்.பி.க்களின் பதவி காலம் முடிவடைகிறது. இவர்களில் 9 பேர் மத்திய அமைச்சர்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த எல்.முருகனும் இவர்களில் ஒருவர். ஆம் ஆத்மி கட்சியின் 3 எம்.பிக்கள் பதவி காலம் வரும் 27-ந் தேதியுடன் முடிவடைகிறது. இந்த இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டும் விட்டது. பிப்ரவரி மாதத்தில் சிக்கிம் எம்பி இடத்துக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
மன்மோகன்சிங் பதவி காலம் முடிவு: ஏப்ரல் மாதத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உட்பட 57 பேரின் பதவி காலம் முடிவடைகிறது. மத்திய அமைச்சர்கள் அஸ்வின் வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான், பூபேந்திர யாதவ், மன்சுக் மாண்டவியா ஆகியோரது பதவி காலமும் ஏப்ரலில் முடிவடைகிறது. ஜூலை மாதத்தில் 4 நியமன எம்பிக்கள் பதவி காலம் முடிவுக்கு வருகிறது.
காலியாகும் இடங்கள்: 2024-ம் ஆண்டில் உத்தரப்பிரதேசத்தில் அதிகபட்சமாக 10 ராஜ்யசபா எம்பி இடங்கள் காலியாகின்றன. மகாராஷ்டிரா, பீகார்- தலா 6 இடங்கள், மேற்கு வங்கம் 5 இடங்கள், ஒடிஷா, தெலுங்கானா, ஆந்திரா, கேரளாவில் தலா 3 இடங்கள், ஜார்க்கண்ட் ராஜஸ்தானில் தலா 2 இடங்கள், உத்தரகாண்ட்- இமாச்சல்- ஹரியானா- சத்தீஸ்கரில் தலா 1 இடமும் காலியாகின்றன.
லோக்சபா தேர்தலில் எல்.முருகன் போட்டி?: மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பதவி காலமும் இந்த ஆண்டு நிறைவடைகிறது. லோக்சபா தேர்தலில் எல்.முருகன், தமிழ்நாட்டின் நீலகிரி தொகுதியில் போட்டியிடக் கூடும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ராஜ்யசபா தேர்தல்களில் வெல்வதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் வியூகங்களுடன் தயார் நிலையில் உள்ளன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications