அடேங்கப்பா.. மதுரை எய்ம்ஸ்க்கு இதுவரை ரூ. 7.35 கோடி ஒதுக்கீடாம்.. மத்திய அமைச்சர் சொல்கிறார்..!

மதுரை எய்ம்ஸ்க்கு 7.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளுக்காக இதுவரை ரூ.7.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2015-ல் இருந்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை என்ற பேச்சு உள்ளது.. தமிழ்நாட்டுடன் சேர்த்து மொத்தம் 4 மாநிலங்களில் இந்த எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று அப்போது அறிவிக்கப்பட்டது..

மற்ற 3 மாநிலங்களில் கட்டுமானப்பணி தொடங்கி, அது முடியும் தருவாய்க்கே வந்துவிட்டது.. ஆனால், நமக்கு இன்னும் அதற்கான அறிகுறியே தென்படவில்லை.

ஒப்புதல்

ஒப்புதல்

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரை மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கவில்லை.. அரசாணை வெளியிடவில்லை.. நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.. திட்ட அறிக்கையும் ரெடியாகவில்லை.. நிலம் ஒப்படைக்கப்படவில்லை.. என பல்வேறு புகார்களை எதிர்க்கட்சிகள் சொல்லி கொண்டே இருக்கின்றன... அதற்கேற்றபடி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இது பற்றி ஒருமுறை கேட்கப்பட்டது.

எய்ம்ஸ்

எய்ம்ஸ்

அதற்கு, "எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சகம் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை, நிதி ஒதுக்கவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை பதிலளிக்கவும் இந்த விவகாரம் அந்த சமயத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம் தேர்வில் அதிமுக- பாஜக இடையே நீடிக்கும் திரைமறைவு அரசியல் மோதலே இந்த தாமதத்துக்கு காரணம் என்று ஒரு பேச்சும் தமிழகத்தில் இருக்கவே செய்கிறது..

உதயநிதி

உதயநிதி

அதைவிட, நடந்து முடிந்த தமிழக தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு அதிலும், உதயநிதியின் வெற்றிக்கு இந்த எய்ம்ஸ்ஸும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது... ஆனால் எய்ம்ஸ் எப்போது கட்டப்படும் என்றுகூட தெரியவில்லை. விரிவான திட்ட மதிப்பீடு பற்றிய தகவல்களும் இல்லை என்று தகவல் உரிமை சட்டத்தில் சொல்லப்பட்டுவிட்டதால், பெரிதும் எதிர்பார்ப்பிலேயே இருக்கிறது இந்த எய்ம்ஸ். இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளுக்காக இதுவரை ரூ.7.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது...

மக்களவை

மக்களவை

எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளுக்காக பிரதமரின் சுகாதார பாதுகாப்பு திட்ட நிதியில் இருந்து விடுவிக்கப்பட்ட தொகை பற்றிய விவரங்கள் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் எழுத்துப்பூர்வமாக தன்னுடைய பதிலை அளித்து இருந்தார்.. அதில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த 2019-2020-ம் ஆண்டு ரூ.3.12 கோடியும், 2020-2021-ம் ஆண்டு ரூ.4.23 கோடியும் என மொத்தம் ரூ.7.35 கோடி விடுவிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+