ரூ.2,172 கோடியாமே.. ‛சீக்ரெட்’ நன்கொடை பெற்ற கட்சிகளில் பாஜக டாப்! எவ்வளவு தெரியுமா? முழுவிபரம்
இந்தியாவில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும் ஆண்டுதோறும் பெரிய பெரிய நிறுவனங்கள், தனிநபர்கள் சார்பில் நன்கொடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
டெல்லி: இந்தியாவில் கடந்த 2021-2022ம் ஆண்டில் அறியப்படாத மூலங்களில் இருந்து பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் உள்பட 7 தேசிய கட்சிகள் ரூ.2,172 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளன. இத்தகைய நன்கொடையில் பாஜக தான் டாப்பில் உள்ள நிலையில் 2வது இடத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இருக்கிறது என ஜனநாயக சீர்த்திருத்த சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கட்சிகள் பெறும் நன்கொடைகள், வேட்பாளர்களின் சொத்து விபரங்கள், குற்ற வழக்குகள் குறித்த விபரங்களை அவ்வப்போது ஏடிஆர் (ADR) எனும் ஜனநாயக சீர்த்திருத்த சங்கம் எனும் தன்னார்வ தொண்டு அமைப்பு வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் தான் தற்போது ஜனநாயக சீர்த்திருத்த சங்கம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது. இந்த தகவல் என்பது 2021-22ம் ஆண்டில் கட்சிகள் பெற்ற நன்கொடைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. அதன் விபரம் வருமாறு:

ரூ.2,172 கோடி
இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் முறை அமலில் உள்ளது. தனிநபர்கள் முதல் பெரிய பெரிய நிறுவனங்கள் வரை தங்களுக்கு பிடித்த கட்சிகளுக்கு நன்கொடை வழங்கி வருகின்றன. அந்த வகையில் கடந்த 2021-22ல் 7 தேசிய கட்சிகளுக்கு Unknown Source மூலம் (பணம் கொடுத்தவர்களின் விபரம் வெளியிடப்படாத வகையில் அறியப்படாத மூலம்) ரூ.2,172 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளது.

7 தேசிய கட்சிகள்
அதன்படி தேசிய கட்சிகளாக உள்ள பாஜக, காங்கிரஸ், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ(எம்) மற்றும் என்பிபி(NPP அல்லது National People Party) உள்ளிட்ட கட்சிகளின் மொத்த நன்கொடையில் Unknow Source மூலம் கிடைத்த பணம் என்பது 66.04 சதவீதமாக உள்ளது.

தேர்தல் பத்திரங்களில் அதிகம்
Unknown Source என்பது கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வழங்குவதையும், ரூ.20 ஆயிரத்துக்கு குறைவான தொகையில் நன்கொடை வழங்குவதையும் குறிக்கும். இதுதவிர கட்சி கூப்பன் விற்பனை உள்ளிட்ட வேறு சில விஷயங்களையும் உள்ளடக்கியதாகும். இவ்வாறு பெறும் நன்கொடைகளின் விபரங்களை கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் Unknown Source என தாக்கல் செய்கின்றன. அந்த வகையில் தான் 7 கட்சிகளுக்கும் கடந்த 2021-2022ல் ரூ.2,172 கோடி வரை Unknown Source மூலம் நன்கொடையாக கிடைத்துள்ளது. இதில் ரூ.1,811.94 கோடி அதாவது 83.41 சதவீதம் தேர்தல் பத்திரங்களாகவும், மீதமுள்ள தொகை ரூ.20 ஆயிரத்துக்கு உட்பட்டவர்கள் வழியாக கிடைத்த தொகையாவும் உள்ளது.

முதலிடத்தில் பாஜக
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கட்சிகள் ஒவ்வொன்றும் தங்களின் கட்சி வருமானங்கள் குறித்த விபரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இந்த தகவலை இந்திய ஜனநாயக சீர்த்திருத்த சங்கம் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த கட்சிக்கு கிடைத்த நன்கொடையில் Unknow Source மூலம் பாஜகவுக்கு அதிக நிதி கிடைத்துள்ளது. அதன்படி பாஜகவுக்கு 2021-22ல் ரூ.1,161 கோடி வரை கிடைத்துள்ளது. இது Unknown Source மூலம் தேசிய கட்சிகள் பெற்ற மொத்த பணத்தில் 53.45 சதவீதமாகும். இதற்கு அடுத்த படியாக Unknow Source மூலம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ரூ.528 கோடியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications