இந்தியாவின் 73வது குடியரசுத் தினம்.. இன்று என்னென்ன கொண்டாட்டங்கள் நடக்கும்? - முழு விபரம்!
டெல்லி: இந்தியாவின் 73வது குடியரசுத் தினத்தை முன்னிட்டு பல முக்கிய கொண்டாட்டங்கள் டெல்லியில் இன்று நடக்க உள்ளது. நாட்டின் 75வது சுதந்திர தின வருடம் இது என்பதால் 'ஆசாதி கா அம்ருத் மகோத்சவம்' கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனால் இந்த முறை குடியரசுத் தின விழாவிலும் பெரிய கலைநிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் நடக்க உள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு பல புதிய வகையான கொண்டாட்டங்கள் இந்த முறை நடக்க உள்ளது.
இன்று காலை பிரதமர் மோடி தேசிய போர் நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்துவதில் இருந்து குடியரசுத் தின விழா தொடங்கும். அதன்பின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி முப்படை அணிவகுப்பை துவங்கி வைப்பார். 10.30 மணி அளவில் தொடங்கும் இந்த அணிவகுப்புகள் பிரம்மாண்டமாக நடக்க உள்ளது.. இன்றும், வரும் நாட்களிலும் என்னென்னெ கொண்டாட்டங்கள் நடக்கும் என்று பார்க்கலாம்..

தேசிய கோடி
இன்று தேசிய கொடியை குடியரசுத் தலைவர் ஏற்றும் போது 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்படும். அதன்பின் முப்படை மரியாதையை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொள்வார். பின்னர் குடியரசுத் தின சிறப்பு பரிசுகள் வழங்கும் நிகழ்வு நடக்கும். அதன்பின் அணிவகுப்புகள் தொடங்கும். நாட்டின் 75வது சுதந்திர தின வருடம் இது என்பதால் ‘ஆசாதி கா அம்ருத் மகோத்சவம்' கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு இந்த முறை குடியரசுத் தின கொண்டாட்டங்கள் ஜனவரி 23ம் தேதியே தொடங்கிவிட்டது. இது நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள் ஆகும்.

ஒரு வார கொண்டாட்டம்
ஜனவரி 30 வரை இந்த கொண்டாட்டம் நடக்கும். ஜனவரி 30 தேசிய தியாகிகள் தினம் ஆகும். இனி வரும் வருடங்களில் குடியரசுத் தின கொண்டாட்டம் இதேபோல் ஒரு வாரம் முழுக்க நடக்கும். கொரோனா பரவல் காரணமாக குடியரசுத் தின அணிவகுப்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 2 டோஸ் போட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 15 வயது மேற்பட்டவர்களில் 1 டோஸ் போட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடு
5000-8000 பேர் வரை இன்று அணிவகுப்பை காண வர உள்ளனர் . முதல்முறையாக இந்த வருடம் இந்திய விமானப்படையின் 75 விமானங்கள் அணிவகுப்பில் கலந்து கொள்கிறது. அப்பாச்சி, ரபேல், சுகோய், ராஹத், ஏகலைவா, திரிசூல், திரங்கா, டகோட்டா ஜாகுவார் எம்ஐ-17, சாரங், விஜய், அம்ரித் போன்ற விமானப்படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இன்று அணிவகுப்பு சாகசங்களை செய்ய உள்ளன.

விமானங்கள்
இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஜனவரி 29ம் தேதி டிரோன் கலைநிகழ்ச்சி நடத்தப்படுகிறது.'Beating the Retreat' என்ற பெயரில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட 1000 டிரோன்கள் சேர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. மேலும் நாடு முழுக்க நடத்தப்பட்ட வந்தே பாரதம் நடன போட்டி மூலம் தேர்வான 480 நடன கலைஞர்கள் இன்று கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள்.

கலை நிகழ்ச்சிகள்
இந்த கலை நிகழ்ச்சிகளை காண்பதற்காக 10 மிகப்பெரிய எல்இடி திரைகள் ராஜபாதை அருகே மக்கள் வசதிக்காக வைக்கப்பட உள்ளது. ராஜ்புத் ரெஜிமென்ட், அசாம் ரெஜிமென்ட், ஜம்மு காஷ்மீர் லைட் ரெஜிமென்ட், சீக்கிய லைட் ரெஜிமென்ட், ஆர்மி ஆர்டனன்ஸ் கார்ப்ஸ் மற்றும் பாராசூட் ரெஜிமென்ட் உள்ளிட்ட ராணுவ பிரிவுகளின் அணிவகுப்பும் இன்று நடக்க உள்ளது. இன்னும் பல ரெஜிமென்ட் இந்த அணிவகுப்பில் கலந்து கொள்ள இருக்கிறது.
Recommended Video

அலங்கார ஊர்திகள்
இதையடுத்து பல்வேறு 25 அலங்கார ஊர்திகள் இந்த அணிவகுப்பில் கலந்து கொள்ளும். பல்வேறு மாநிலங்கள், அரசு அமைப்புகள், படைகளின் அணிவகுப்புகள் நடக்கும். டிஆர்டிஓ சார்பாக இரண்டு அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் கலந்து கொள்ளும். 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அலங்கார ஊர்திகள் இன்று அணிவகுப்பில் பங்கு பெறும். 9 மத்திய அரசின் துறைகளின் அலங்கார ஊர்திகள் பங்கு பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications