Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

75வது குடியரசு தின விழா: விமானப் படையின் 51 விமானங்கள், ஹெலிகாப்டர்கள் வானில் சாகசம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இன்று 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் ஜனாதிபதி திரவு முர்மு தேசிய கொடி ஏற்றினார். இந்த விழாவில் பிரதமர் மோடி, சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர்.

75th Republic Day 2024: Theme, Celebrations, Parade, Flag Hoisting, Chief Guest, Speech and News Highlights in Tamil

Jan 26, 2024, 12:35 pm IST

டெல்லியில் 75-வது குடியரசு தின கொண்டாட்டங்கள் நிறைவடைந்தன. தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் நிறைவடைந்தன. ஜனாதிபதி திரவுபதி முர்மு பாதுகாப்பு படையினருடன் ஜனாதிபதி மாளிகைக்குப் புறப்பட்டார்
Jan 26, 2024, 12:25 pm IST

விமானப் படையின் ரஃபேல், சுகோய், மிக் ரகங்களைச் சேர்ந்த 29 விமானங்கள் டெல்லி வானில் சாகசங்கள் நிகழ்த்தின
Jan 26, 2024, 12:21 pm IST

இந்திய விமானப் படையின் வான் சாகசங்களில் பிரெஞ்சு விமானப் படையின் 3 போர் விமானங்களும் இணைந்தன
Jan 26, 2024, 12:19 pm IST

இந்திய விமானப் படையின் 54 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் வானில் சாகசங்கள் நிகழ்த்துகின்றன
Jan 26, 2024, 12:17 pm IST

மோட்டார் சைக்கிளில் பெண் வீராங்கனைகளின் சாகசம் பெரும் வரவேற்பைப் பெற்றது
Jan 26, 2024, 11:57 am IST

மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பைத் தொடர்ந்து பெண்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்ற பல்வேறு மாநிலங்களின் கலைநிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
Jan 26, 2024, 11:55 am IST

மத்திய அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் அலங்கார ஊர்திகள் அணிவகுத்து செல்கின்றன
Jan 26, 2024, 11:45 am IST

அயோத்தி ராமர் கோவில் மாதிரியுடன் உத்தரப்பிரதேச மாநில அரசின் அலங்கார ஊர்தி அணிவகுத்தது
Jan 26, 2024, 11:40 am IST

குடவோலை முறையில் தேர்தல் ஜனநாயகத்தை தமிழ்நாடு எப்படி நிலைநாட்டியதை என்பதை விளக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி அணிவகுக்கிறது
Jan 26, 2024, 11:38 am IST

ஆந்திரா மாநில அரசின் அலங்கார ஊர்தியில் பள்ளிக் கல்வித் தர மேம்பாட்டை விவரிப்பவை இடம் பெற்றிருந்தன
Jan 26, 2024, 11:37 am IST

வீர சிவாஜி கம்பீரமாக காட்சி தர, வீர சாகசங்களுடன் மகாராஷ்டிரா அலங்கார ஊர்தி அணிவகுத்தது
Jan 26, 2024, 11:36 am IST

ஒவ்வொரு மாநில அலங்கார ஊர்தியும் தனித்துவ நடனங்கள், மாநில சிறப்பை விளக்கும் வகையில் அணிவகுத்து கொண்டிருக்கின்றன
Jan 26, 2024, 11:34 am IST

தமிழ்நாடு உட்பட மொத்தம் 16 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுக்கின்றன
Jan 26, 2024, 11:31 am IST

முப்படைகளின் பல்வேறு பிரிவுகளின் அணிவகுப்பைத் தொடர்ந்து மத்திய அரசு துறைகள், மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுக்கின்றன
Jan 26, 2024, 11:30 am IST

டெல்லி பெண் காவலர்களின் தீரமிக்க அணிவகுப்பு
Jan 26, 2024, 11:28 am IST

எல்லை பாதுகாப்பு படையின் பெண்கள் பிரிவின் கம்பீர அணிவகுப்பு
Jan 26, 2024, 11:24 am IST

எல்லை பாதுகாப்பு படையினர் ஒட்டகங்களில் அமர்ந்து கம்பீரமாக அணிவகுத்தனர்
Jan 26, 2024, 11:22 am IST

விமானப் படையில் மகளிர் சக்தியை வெளிப்படுத்தும் அலங்கார ஊர்தி அணிவகுப்பு
Jan 26, 2024, 11:21 am IST

நாட்டின் விமானப் படை வீராங்கனைகள் மிடுக்காக, கம்பீரமாக அணிவகுத்தனர்
Jan 26, 2024, 11:17 am IST

டெல்லி கடமைப் பாதையில் தேசத்தின் பாதுகாப்பு படையின் பல்வேறு பிரிவுகள் நமது வலிமையை உலக்கு பறைசாற்றும் வகையில் கம்பீர அணிவகுப்பு நடத்துகின்றன
Jan 26, 2024, 11:06 am IST

மெட்ராஸ் ரெஜிமெண்ட், சீக்கிய ரெஜிமெண்ட் வீரர்கள் டெல்லி கடமைப் பாதையில் அணிவகுத்தனர்
Jan 26, 2024, 11:05 am IST

முப்படைகளின் பெண்கள் பிரிவு மிடுக்கு நடையுடன் கம்பீரமாக அணிவகுத்து பெரும் வரவேற்பைப் பெற்றது
Jan 26, 2024, 11:01 am IST

டெல்லி காவல்துறை பிரிவுகள், முப்படைகளின் பிரிவுகள் கம்பீரமாக டெல்லி கடமைப் பாதையில் அணிவகுத்தன
Jan 26, 2024, 10:53 am IST

இந்திய ராணுவத்தின் அதிநவீன ராணுவ தளவாடங்கள் டெல்லி கடமைப் பாதையில் வீறுநடை போட்டு அணி வகுத்தன
Jan 26, 2024, 10:50 am IST

டெல்லி கடமைப் பாதையில் இந்திய ராணுவ டாங்கிகள் அணிவகுத்து தேசத்தின் வலிமையை உலகுக்கு பறைசாற்றின
Jan 26, 2024, 10:48 am IST

பிரான்ஸ் போர் விமானங்களும் டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் கம்பீரமாக பங்கேற்றின
Jan 26, 2024, 10:47 am IST

75-வது குடியரசு தின விழா நடைபெறும் டெல்லி கடமைப் பாதையில் பிரான்ஸ் ஆயுத படைகள் அணிவகுத்தன
Jan 26, 2024, 10:46 am IST

டெல்லி கடமைப் பாதையில் வீர தீர செயல் விருதுகளைப் பெற்றவர்கள் அணிவகுத்தனர்
Jan 26, 2024, 10:44 am IST

டெல்லி கடமைப் பாதை மேல் விமானப் படை ஹெலிகாப்டர்கள் வானில் வட்டமிட்படி அணிவகுத்து மலர் தூவின
Jan 26, 2024, 10:42 am IST

டெல்லி கடமைப் பாதையில் அணிவகுப்பு மரியாதை தொடங்கியது; மங்கள வாத்திய இசையை இசைத்தபடி பெண்கள் அணிவகுத்தனர்; இந்திய இசைக் கருவிகளுடன் 100 பெண்கள் இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர்
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+