ரூ.20,000 வாங்கியவர்கள் சம்பளம் இனி 57,200.. தயாராகும் 8வது ஊதியக் குழு! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்
டெல்லி: இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக்குழு அமைக்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது நடைமுறையில் உள்ள 7வது ஊதியக்குழு 2016ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த ஊதியக்குழுவின் பதவிக்காலம் 2026ஆம் ஆண்டுடன் நிறைவடைய உள்ள நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியம், ஓய்வூதியதாரர்களுக்கான படிகளை மாற்றி அமைக்க 8வது ஊதியக்குழு அமைக்க ஒப்புதல் வழங்கி உள்ளது.
தற்போது 8வது ஊதியக் குழு நியமனம் தொடங்கி இருக்கின்றன. ஊதியக்குழுவில் ஆலோசகர்கள் உட்பட 42 காலியிடங்கள் மற்றும் தலைவர் பொறுப்பினை நிரப்புவதற்கான செயல்பாடுகளை மத்திய அரசு தொடங்கி இருக்கிறது. இந்த மாத இறுதியில் முறையான நியமனங்கள் செய்யப்பட்டு அடுத்தடுத்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் 2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஊதியக்குழு பரிந்துரைகள் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஊதியக்குழுவின் மிக முக்கியமான ஃபிட்மண்ட் ஃபேக்டர் எனப்படும் தகுதி காரணி முக்கியமான ஒன்றாகும். 7வது ஊதியக்குழு நடைமுறையின் போது ஃபிட்மண்ட் ஃபேக்டர் 2.57 சதவிகிதமாக இருந்தது. அதாவது ஒரு ஊழியர் ரூ.10 ஆயிரம் ஊதியமாக பெற்றிருந்தால், 2.57 ஃபிட்மண்ட் ஃபேக்டரின் படி, அவரின் சம்பளம் ரூ.25,700 ஆக உயர்ந்திருக்கும்.
தற்போது 8வது ஊதியக்குழுவின் ஃபிட்மண்ட் ஃபேக்டர் 2.86 ஆக நிர்ணயிக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் எவ்வளவு உயரும் என்று பார்க்கலாம். ஒருவேளை அப்படி நிர்ணயம் செய்யப்பட்டால், அடிப்படை ஊதியமாக ரூ.20,000 பெற்று வந்தால், அவரின் ஊதியம் ரூ.57,200 ஆக உயரும். அதேபோல் அடிப்படை ஊதியம் ரூ.30 ஆயிரமாக இருந்தால், அவரின் ஊழியம் ரூ. 85,800ஆக உயரும்.
ரூ.40 ஆயிரம் அடிப்படை ஊதியமாக இருந்தால், அவரின் ஊதியம் ரூ.1,14,400 ஆக உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஃபிட்மண்ட் ஃபேக்டர் அடிப்படை ஊதியத்தில் மட்டுமல்லாமல், அகவிலைப்படி கொடுப்பனவு, வீட்டு வாடகை கொடுப்பனவு ஆகியவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் இது மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications