ஒரே அறிவிப்பில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆப்பு.. 8வது ஊதியக்குழு! பாஜக அமைச்சர் சொன்ன வார்த்தை!
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கிடையில் நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த 8வது ஊதியக்குழு குறித்து மத்திய அரசு முக்கியமான விளக்கத்தை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படியை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு பதிலளித்த மத்திய நிதித்துறை, இப்படியான எந்த திட்டமும் தற்போது பரிசீலனையில் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. இதனால், மத்திய அரசு ஊழியர்கள் மத்தியிலேயே பேசப்பட்டு வந்த பல யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், முதல்நாளில் மக்களவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி, 8வது ஊதியக்குழு குறித்து எழுத்துப்பூர்வமான அறிக்கையை சமர்ப்பித்தார்.
அதில், 8வது ஊதியக்குழுவில் அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படியை இணைப்பது குறித்து எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும், இது தொடர்பாக எந்தவொரு பரிசீலனையும் நடைபெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர்
கடந்த சில மாதங்களாகவே 50% அடிப்படியில் அகவிலைப்படியை இணைக்க வேண்டும் என்று பல்வேறு மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி வந்த நிலையில், இந்த மறுப்பு செய்தி தற்போது பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் தொடந்து முன்வைத்து வரும் இந்தக் கோரிக்கை, விலைவாசி ஏற்றமும், பணவீக்கமும் அதிகரித்திருக்கும் சூழ்நிலையையும் காரணமாகக் கொண்டது. இருப்பினும், மத்திய அரசு தற்போதைய அகவிலைப்படி உயர்வு முறைமையே தொடரும் எனக் கூறுவதால், இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என நினைத்திருந்த கோடிக்கணக்கான ஊழியர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
8வது ஊதியக்குழு
இதற்கிடையில், 8வது ஊதியக்குழுவை அமைப்பதற்கான ஒப்புதல் ஏற்கனவே மத்திய அமைச்சரவையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வழங்கப்பட்டது. அதன் பணி வரையறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதையடுத்து, கடந்த அக்டோபர் 29ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதே குழுவில் பெங்களூரு ஐஐஎம் பேராசிரியர் புலாக் கோஷ் பகுதி நேர உறுப்பினராகவும், மத்திய பெட்ரோலிய துறைச் செயலர் பங்கஜ் ஜெயின் உறுப்பினர் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு
அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் 8வது ஊதியக்குழு அமலுக்கு வரும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்திருந்தார். இந்த அமலாக்கத்தால் தற்போது பணியாற்றி வரும் 49 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஊதியக்கட்டமைப்பு எப்படி அமையும், எவ்வாறான மாற்றங்கள் உள்படுத்தப்படுகின்றன என்ற விவரங்கள் விரைவில் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.
DA இணைப்பு
அகவிலைப்படி இணைப்பு குறித்த கோரிக்கை இந்தக் சூழலில் மறுக்கப்பட்டாலும், 8வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் வெளியான பிறகு மீண்டும் அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படியை இணைக்கப்படலாம் என மத்திய அரசின் பணியாளர் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications